சமூகங்களிடையே சகோதரத்துவ சகவாழ்வை உணர்த்தும் நன்னாள்

இலங்கையின் முஸ்லிம்கள், உலகெங்கிலுமுள்ள சக முஸ்லிம் சகோதரர்களுடன் சேர்ந்து ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய நாட்காட்டியின் இறுதி மாதமான துல் ஹஜ் மாதத்தில் ஹஜ் யாத்திரை செய்யப்படுகிறது. மனிதகுலத்தை உருவாக்கிய சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு சேவை செய்யும் விதமாக முஸ்லிம்களின் தியாகத்தையும் பக்தியையும் இது குறிக்கிறது. முஸ்லிம்களின் ஐந்து அத்தியாவசிய கடமைகளில் ஒன்றான ஹஜ் செய்வது என்பது பணக்காரர், ஆரோக்கிய மற்றும் அனைத்து சராசரி மக்களுக்கும் அவர்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹஜ் செய்ய முடியாதவர்கள், தங்கள் செல்வத்தை தங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏழை மக்களுக்கு வழங்கி உதவ முடியுமென்பதை இஸ்லாம் எமக்கு கற்பிக்கிறது. இஸ்லாத்தின் போதனைகளின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளைப் புரிந்துகொள்வோம், இது அனைத்து சமூகங்களிடையேயான சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துகிறது அத்துடன் அனைத்து மக்களிடையே சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் வாழ்வதற்கு ஊக்குவிக்கவும் செய்கிறது. இன்று…

துக்ளக் தர்பார்’ வெளியீட்டில் மாற்றம்..

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என்று பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வருகிறார் விஜய் சேதுபதி. அவருடைய நடிப்பில் 'மாமனிதன்', 'லாபம்', 'கடைசி விவசாயி', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. இதில் 'துக்ளக் தர்பார்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியது. ஆனால், ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால், தொலைக்காட்சி உரிமம் சன் டிவியிடம் இருந்ததால் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இறுதிவரை சன் டிவி நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்புக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு ஒளிபரப்ப…

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய படமொன்றில் ஆண்ட்ரியா நடித்து வருவது உறுதியாகியுள்ளது. விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், படங்கள் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன். லாரன்ஸ் நடிக்கவுள்ள 'அதிகாரம்' படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். அதற்கு முன்னதாக, வெற்றிமாறன் தயாரித்து வரும் மற்றொரு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். இதில் ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழுப் படப்பிடிப்பையும் சென்னைக்குள்ளேயே முடித்துவிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் ஆண்ட்ரியா ‘வட சென்னை’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ’ஆடுகளம்’ படத்தில் நாயகி…

சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகம்

முரளி, வடிவேலு நடித்து 2002-ல் வெளியாகி வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் நகைச்சுவை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சுந்தர்.சி.யின் அரண்மனை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களும் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம். லாரன்சின் காஞ்சனா ஆகிய படங்களின் 3 பாகங்கள் வெளியானது. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராகிறது. இந்த நிலையில் முரளி, வடிவேலு நடித்து 2002-ல் வெளியாகி வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் நகைச்சுவை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் முரளி கதாபாத்திரத்தில் கருணாகரனும், வடிவேலு கதாபாத்திரத்தில்…

திருமணம்போல விவாகரத்தும் புனிதமானதுதான்..

தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சுவாசிகா மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கேரளாவில் வரதட்சணை கொடுமைகள் அதிகம் நடப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் சுவாசிகா அளித்துள்ள பேட்டி வருமாறு:- ''திருமண வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும் பெண்கள் சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயம், குடும்பம் போன்ற பல காரணங்களால் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளனர். நான் திருமணம் செய்து கொள்ளும்போது பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை தீர்க்க முடிந்தவரை முயற்சி செய்வேன். நிலைமை கைமீறி போனால் விவாகரத்து பற்றி யோசிப்பேன். மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வது பயங்கரமானது. இரண்டு பேர் மகிழ்ச்சியோடு வாழ திருமணம் செய்து கொள்கின்றனர். தாங்கமுடியாத பிரச்சினைகள் வரும்போது விவாகரத்து செய்து கொள்வது உயிர்களை மாய்க்காத ஒரு வழியாகும். விவாகரத்தும், திருமணம்போன்று புனிதமானதுதான். அது ஒரு…

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர்கள்

கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்து குறைந்த நாட்களிலேயே முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தன்னுடன் நடித்த நடிகர்களின் பிடித்த குணங்கள் பற்றி கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:- “நான் பள்ளியில் படித்த நாட்களிலேயே சூர்யாவுக்கு பெரிய ரசிகை. எனது அம்மா சூர்யாவின் அப்பா சிவகுமாருடன் சில படங்களில் நடித்து இருக்கிறார். எனது அம்மாவிடம் சூர்யாவுடன் ஒரு நாள் நடிப்பேன் என்று சவால்விட்டேன். அது நிஜமானது. சூர்யா படப்பிடிப்பு அரங்கில் அவருக்குத் தொடர்பு உள்ள காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார். ஏதாவது சந்தேகம் இருந்து நாம் கேட்டால் மட்டும்தான் யோசனை சொல்வார். சக நடிகைகளை உற்சாகப்படுத்துவதில் முன்னணியில் இருப்பார். ஆனால் யார் விஷயத்திலும் மூக்கை நுழைக்கமாட்டார். நடிகையர் திலகம் படத்தில் துல்கர் சல்மான் நடிப்பை பார்த்து அசந்தேன். ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்தார். தெலுங்கில் நானியை யதார்த்த நடிகர் என்பார்கள்…

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 3,998

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு நேற்றை விட அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 42 ஆயிரத்து 015 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 337 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரேநாளில்…