டென்மார்க் மகத்தான வெற்றி 4 – 1 கோல்கள்

இன்று இரவு ( 21.06.2021 ) 21.00 மணிக்கு ஆரம்பித்த டென்மார்க் – ரஸ்யா நாடுகளுக்கிடையேயான ஐரோப்பா கிண்ணமஆ 2020ற்கான ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அதேவேளை நாடகத்:தன்மை கொண்டதாக நடைபெற்றது. ஆட்ட முடிவில் டென்மார்க் 4 க்கு 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. நான்கு அணிகள் கொண்ட குழுவில் டென்மார்க் ஒரு தடவை மட்டும் வென்றிருந்தாலும் தனது குழுவில் இரண்டாவது இடத்தை பெற்றது. இதற்குக் காரணம் பெல்ஜியம் பின்லாந்து நாட்டை 2 – 0 என்ற கோல் கணக்கில் வென்ற காரணத்தால் டென்மார்க்கிற்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

ஆட்டத்தின் 38 வது நிமிடத்தில் வயதில் குறைந்த மிக்கேல் டாம்ஸ்கோட் முதல் கோலை போட்டு டென்மார்க்கிற்கு உற்சாகத்தை கொடுத்தார். இரண்டாவது கோலை யூசுப் போவுல்சன் 59 நிமிடம் போட 2 – 0 என்ற கோல்கணக்கில் டென்மார்க் முன்னணி பெற்றது. 70 வது நிமிடம் ரஸ்யா பனால்டி முறையில் ஒரு கோலை போட்டது. அர்டிம் ருஸ்யுபா ரஸ்ய பனால்டியை சிறப்பாக அடித்தார். தொடர்ந்து ஆனர்ஸ் கிறிஸ்டியான்சன் 79 வது நிமிடம் அடுத்த கோலை போட 3 – 1 என்ற நிலை காணப்பட்டது. அடுத்த கோலை டென்மார்க் வீரர் யோக்கிம் மொஃலே 82 வது நிமிடம் போட்டார். நிறைவாக 4 – 1 என்ற கோல்கணக்கில் டென்மார்க் வென்றது. அடுத்த ஆட்டம் கால் இறுதிக்கு முந்தைய காலே அரைக்கால் இறுதியாட்டமாகும் இது கொலண்ட் நாட்டில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. டென்மார்க் வேல்ஸ் அணிகள் மோதும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டென்மார்க் ரஸ்ய அணிகளின் மோதல் டென்மார்க் தலைநகர் பாக்கனில் இடம் பெற்றது. பின்லாந்து, பெல்ஜியம் அணிகள் ரஸ்யா சென் பீட்டர்ஸ் பேர்க் நகரில் மோதின.

முதல் ஆட்டத்தில் தமது முன்னணி வீரர் கிறிஸ்டியான் இயரிக்சனுக்கு ஏற்பட்ட மாரடைப்பால் தள்ளாட்டமடைந்த டென்மார்க் இப்போதுதான் தன்னை சுதாகரித்து எழும்பியுள்ளது. வெற்றி மகிழ்ச்சியால் கொரோனாவை மறந்து ரசிகர்கள் நிறைந்து, ஆடிக்கிடக்கிறார்கள். முகக் கவசம் தேவையில்லை என்று அறிவித்த காரணத்தால் கொரோனா பாதிப்பு இருப்பது போன்ற தோற்றம் காணப்படவில்லை. ஆயினும் மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

டென்மார்க் வென்ற காரணத்தால் நீண்ட காலமாக வெற்றித்தாகத்தில் கிடந்த டேனிஸ் ரசிகர்களின் மகிழ்ச்சி இப்போது கரைபுரண்டு ஓடுகிறது. பியர் விற்பனை பீப்பாக்கள் கண் சிமிட்டுகின்றன. தொலைக்காட்சிகளின் அலப்பார தாங்க முடியாதளவுக்கு இருக்கின்றன. 20 வயது இளைஞரான மிக்கேல் டாம்ஸ்கோட் போட்ட முதல் கோல் டென்மார்க்கை வெற்றித்தடத்தில் இறக்கியது. இனி காது புளிக்க வரும் சில நாட்கள் மிக்கேல் டாம்ஸ்கோட் என்ற பெயர் காது புளிக்க ஒலிக்கும் என்கிறார் ரசிகர் ஒருவர்.

அலைகள் 21.06.2021

Related posts