வாழ விடாத உலகம்; நடிகை கங்கனா வருத்தம்

தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவும் விடாது என நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். நடிகை கங்கனா ரணாவத் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக இந்த படம் தயாராகி உள்ளது. அடுத்து இந்திரா காந்தி வாழ்க்கை கதையில் நடிக்க உள்ளார். கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரணாவத் வருத்தத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், “தோல்வி அடைந்தவர்களை மக்கள் விட்டு விடுவார்கள். அவர்களை கேவலமாகவும் நடத்துவார்கள். தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவும் விடாது. கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை பயமுறுத்துவார்கள். கீழே தள்ளி விடவும் முயற்சிப்பார்கள். தனிமைப்படுத்தவும் செய்வார்கள். வெற்றி பெற்றவர்கள் தனிமையில்தான்…

இந்தியன்-2 பட விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம்

இந்தியன்-2 பட விவகாரத்தில் தீர்வு காண ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டார். இதில் நடிப்பதற்காக நடிகர் கம்ல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்த படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். இதனால் படப்பிடிப்பு பல நாட்கள் தடைப்பட்டது. இதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் இறங்கியதாலும், கொரோனா பரவல் காரணமாகவும் படப்பிடிப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர்…

இந்தியில் தயாராகிறது ‘ராட்சசன்’

ராட்சசன்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அக்‌ஷய் குமார் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. 'ராட்சசன்' படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது ரஞ்சித் திவாரி இயக்கத்தில் 'ராட்சசன்' இந்தி ரீமேக் தயாராகவுள்ளது. இதில் நாயகனாக அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளார். இருவருமே இணைந்து 'பெல் பாட்டம்' படத்தில் பணிபுரிந்துள்ளனர். தற்போது இதே கூட்டணி 'ராட்சசன்' இந்தி ரீமேக்கிலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில்…

இலங்கை வீரர்கள் மீது கவலையும் கோபமும் உள்ளது

பெரும் செலவில் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட வீரர்களின் நடத்தை குறித்து தான் வருத்தப்படுவதாக இலங்கை கிரிக்கெட்டின் வைத்திய குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சுற்றில் கலந்து கொண்ட குசல் மெந்திஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலகவின் செயற்பாடுகள் தொடர்பில் அததெரண பிக் போகஸ் நிகழ்ச்சில் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். இவர்கள் தங்கும் இடத்தில் கால்வாய் ஒன்று உள்ளது. யாரும் இல்லாத போது காலையிலோ அல்லது மாலையிலோ கால்வாய் வழியாக நடந்து செல்லலாம். ஆனால் அந்த பாதையில் ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் பக்கம் செல்லக்கூடாது என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குறித்த பாலத்தைக் கடந்ததும், நகர மையத்தை அடையலாம். வீரர்களுக்கு வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய அல்லது ஏதாவது செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த…

10 வாரங்களுக்குள் டெல்டா திரிபு வைரஸ் நாடு முழுவதும் பரவும்

முறையான சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளை பின்பற்றப்படாவிட்டால் 10 வாரங்களுக்குள் நாட்டில் முக்கிய வைரஸ் பரவலாக டெல்டா திரிபு கொரோனா வைரஸ் பரவல் இடம் பிடிப்பதைத் தவிர்க்க முடியாதென கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: கொரோனா வைரஸ் காரணமாக வயது முதிர்ந்தோரே அதிகளவில் மரணமடைகின்றனர். அதன் காரணமாகவே தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது எல்பா திரிபு கொரோனா வைரஸ் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டோரே பெருமளவில் மரணமடைகின்றனர்.அதனால்தான் அரசாங்கம் தீர்க்கமான தீர்மானமொன்றை மேற்கொண்டு 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதுவரை நாட்டில் 12 கர்ப்பிணித்…