டென்மார்க் மகத்தான வெற்றி 4 – 1 கோல்கள்

இன்று இரவு ( 21.06.2021 ) 21.00 மணிக்கு ஆரம்பித்த டென்மார்க் - ரஸ்யா நாடுகளுக்கிடையேயான ஐரோப்பா கிண்ணமஆ 2020ற்கான ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அதேவேளை நாடகத்:தன்மை கொண்டதாக நடைபெற்றது. ஆட்ட முடிவில் டென்மார்க் 4 க்கு 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. நான்கு அணிகள் கொண்ட குழுவில் டென்மார்க் ஒரு தடவை மட்டும் வென்றிருந்தாலும் தனது குழுவில் இரண்டாவது இடத்தை பெற்றது. இதற்குக் காரணம் பெல்ஜியம் பின்லாந்து நாட்டை 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்ற காரணத்தால் டென்மார்க்கிற்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 38 வது நிமிடத்தில் வயதில் குறைந்த மிக்கேல் டாம்ஸ்கோட் முதல் கோலை போட்டு டென்மார்க்கிற்கு உற்சாகத்தை கொடுத்தார். இரண்டாவது கோலை யூசுப் போவுல்சன் 59 நிமிடம் போட 2 - 0 என்ற கோல்கணக்கில் டென்மார்க்…

மீண்டும் தனுசுக்கு ஜோடி சாய் பல்லவி

தனுசுக்கு இந்தியில் அந்த்ராங்கி ரே, ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஆகியவை கைவசம் உள்ளன. இந்தநிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர். தனுஷ் படத்தை அதிக பொருட் செலவில் எடுக்கின்றனர். இதர நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. தி கிரேமேன் ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்காவில் முகாமிட்டுள்ள தனுஷ் சென்னை திரும்பியதும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சாய்பல்லவிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மாரி 2-ம் பாகம் படத்தில் தனுஷ், சாய்பல்லவி ஜோடியாக நடித்து இருந்தனர்.…

விவாகரத்துக்கு பிறகு மீண்டும் இணைந்த நட்சத்திர தம்பதி

நடிகர் ரஞ்சித்தும், நடிகை பிரியா ராமனும் கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியா ராமன் 1993-ல் ரஜினிகாந்த் தயாரித்து நடித்த வள்ளி படத்தில் அறிமுகமாகி சூர்யவம்சம், பொன்மனம், அரிச்சந்திரா, புதுமைப்பித்தன், நேசம் புதிது, சின்னராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ரஞ்சித்தும் 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். சிந்துநதி பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், நட்புக்காக, தேசிய கீதம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சில வருடங்களுக்கு பிறகு ரஞ்சித்தும் பிரியாராமனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2014-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு மீண்டும் நட்பானார்கள். ஆனாலும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வரவில்லை. ரஞ்சித் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நாளையொட்டி பிரியாராமனுடன் ஜோடியாக…

கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்

16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.கவர்னர் தனது உரையை, ``வணக்கம்” என தமிழில் தொடங்கினார். மேலும், ``தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்’’ என்றார். தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் மேலும் கூறியதாவது;- அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாக கொண்டிருக்கும். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் மீண்டும் அமைக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தேவைப்படும் உதவிகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளாக பிரதமரிடம் முதல்வர் முன்வைத்திருக்கிறார். ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும்.…

ராம்சரண் பட நாயகியாக கியாரா அத்வானி

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. மேக்கப் பிரச்சினை, கமலுக்கு அறுவை சிகிச்சை, படப்பிடிப்பில் விபத்து, கரோனா அச்சுறுத்தல் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு தடைகளால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தில் ராஜு தயாரிப்பில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் நாயகியாக ஆலியா பட் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இதன் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக, ராம்சரண் - கியாரா அத்வானி ஜோடி 'விநய விதய ராமா' படத்தில் இணைந்து நடித்துள்ளது. அதற்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளது. 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான்…

இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தல்! (முழு விபரம்)

கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் புதிதாக 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் இன்று (21) அதிகாலை 4 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, குருநாகல், மொனராகலை, அம்பாறை, மாத்தளை, கண்டி, மட்டக்களப்பு, காலி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முன்னர் பெயரிட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் இன்று (21) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் கம்பஹா மாவட்டம் பியகம பொலிஸ் பிரிவு - யடிஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு மீகஹவத்தை பொலிஸ் பிரிவு - சியபலாபெவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு…

யாழ் மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனம் ஒன்று குறைப்பு..

யாழ். மாவட்டத்துக்கான பாராளுமன்ற ஆசனமொன்று குறைப்பு செய்யப்பட்டு கம்பஹா மாவட்டத்துக்கு புதிதாக ஒரு ஆசனம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான புதிய கணிப்பீட்டின் அடிப்படையில் இது இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தற்போது கம்பஹா மாவட்டத்தில் 18 பாராளுமன்ற ஆசனங்கள் காணப்படுவதுடன், அது 19ஆக அதிகரிக்கப்படவுள்ளது. தேவேளை, யாழ்.மாவட்டத்தில் 07 ஆக காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 06ஆக குறைப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இலங்கையில் புதிதாக 1,72,000 வாக்காளர்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. வருடாந்தம் மாவட்டங்களில் பதிவாகும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்-. ஆசனங்களை 6 லிருந்து 60 ஆக கூட்டினாலும் எதுவும் நடக்காது என்பதற்கு 72 வருட்கள் போதுமானது..