சஜித்திடம் சுகநலன் விசாரித்த பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சுக நலன்கள் குறித்து விசாரித்துள்ளார். கொவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் பிரதமர் மஹிந்த தொலைபேசி வழியாக சஜித்தின் சுகல நலன்களை விசாரித்துள்ளார். ஏதேனும் உதவிகள் தேவையா எனவும் பிரதமர் இதன்போது சஜித்திடம் விசாரித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது பாரியார் ஜலனி பிரேமதாச ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தமது சுகநலன்களை விசாரித்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித், பிரதமருக்கு நன்றி பாராட்டியுள்ளார்.
——-

ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லப்படும், தீப்பிடித்த MV X-Press Pearl கப்பல் தற்போது கடலுக்குள் மூழ்கி வருவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான குறித்த கப்பலை, ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்த உத்தரவுக்கமைய, இன்று (02) முற்பகல் அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லப்படும், தீப்பிடித்த MV X-Press Pearl கப்பல் தற்போது கடலுக்குள் மூழ்கி வருவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான குறித்த கப்பலை, ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்த உத்தரவுக்கமைய, இன்று (02) முற்பகல் அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

Related posts