எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் படம்: நடிகர் தனுஷ் வருத்தம்

தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படம் இந்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இதனை தனுஷ் விரும்பவில்லை. தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படம் இந்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இதனை தனுஷ் விரும்பவில்லை. திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜெகமே தந்திரம் தியேட்டரில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார். தனுஷ் ரசிகர்களும் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி ஜெகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி. தளத்துக்கு விற்று விட்டனர். இது தனுசுக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜெகமே தந்திரம் படம் சம்பந்தமான எந்த பதிவுகளையும் சமூக வலைத்தள பக்கத்தில் தனுஷ் வெளியிடாமல் இருந்தார். தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் தனுஷ் டுவிட்டரில்…

சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா

கவர்ச்சி, நகைச்சுவை, குணசித்திர நடிகையாக வலம் வந்த சோனா தற்போது தொலைக்காட்சி தொடரிலும் நடிக்க தொடங்கி உள்ளார். இதுகுறித்து சோனா அளித்துள்ள பேட்டியில் “சினிமா தான் எனக்கு அடையாளம் தந்தது. நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் “அபி டெய்லர்ஸ்” என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறேன். ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடித்ததால் இப்போதும் அதுமாதிரி நடிக்கவே வாய்ப்புகள் வருகின்றன. வில்லி, நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் மூன்று படங்களிலும் நடிக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். பாலியல் தொல்லைகள் எல்லா துறையிலும் இருக்கிறது. இப்போது பள்ளியில் இருந்தும் இதுபோல் குற்றசாட்டுகள் வருகின்றன. பாலியல் குற்றங்கள் எங்கு நடந்தாலும் முறையான விசாரணையும், தண்டனையும் அவசியம். திரைத்துறையை பொறுத்தவரை, தனித்து குற்றம் சொல்ல முடியாது. சில வருடங்களுக்கு முன் எனக்கும் இதுபோல் பாலியல் தொல்லை நடந்தது. நமக்கான…

ரூ.60 கோடிக்கு பங்களா வாங்கிய கஜோல்

தமிழில் மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜோல். அதில் கஜோல் பாடிய, பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை, பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. தமிழில் மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜோல். அதில் கஜோல் பாடிய, பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை, பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. வேலை இல்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அவர் நடிகர் அஜய்தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். அஜய் தேவ்கன் இந்தியில் புகழ்பெற்ற கதாநாயகனாக இருக்கிறார். சூர்யாவின் சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்து இருந்தார். கஜோலும், அஜய்தேவ்கனும் இணைந்து மும்பை ஜுகு பகுதியில் ரூ.60 கோடிக்கு புதிய பங்களா வீட்டை வாங்கி இருக்கிறார்கள். இந்த பங்களா அமிதாப்பச்சன்,…

இன்று இளையராஜா, மணிரத்னம் பிறந்தநாள்

தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் இளையராஜா, மணிரத்னம் இருவரும் இன்று பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். இந்திய திரையுலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளான இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகிய இருவர் பிறந்த தினம் இன்று. கடந்த 1983 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘பல்லவி அனுபல்லவி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மணிரத்னம். இந்த திரைப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா, அந்த சமயத்தில் தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு, அடுத்ததாக மணிரத்னம் தமிழில் இயக்கிய ‘பகல் நிலவு’ திரைப்படத்திற்கு இளையராஜா மீண்டும் இசையமைத்தார். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்திடவே, அடுத்து மணிரத்னம் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் இளையராஜாவின் இசை ஒலித்தது. மொளன ராகம் திரைப்படத்தின் பாடல்களும், பின்னனி இசையும் இன்று வரை ரசிகர்களிடையே எவர்கிரீன் ஹிட்டாக நிலைத்துள்ளது. அடுத்ததாக…

வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே கியாஸ் டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். வேலூர் மாவட்டம் துரிஞ்சிதலைப்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மகன் ரமேஷ் (வயது 35). இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வந்தார். ரமேஷ் பெங்களூருவில் வெல்டிங் பட்டறை வைத்திருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ரமேஷ் தனது குடும்பத்தினருடன் ஆம்னி வேனில் குடியாத்தம் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று காலை அவர்கள் ஆம்னி வேனில் பெங்களூருவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆம்னி வேனை ரமேஷ் ஓட்டி வந்தார். அவருடன், அவரது மனைவி தீபா (30), மகன் நித்தீஷ் (1) மற்றும் உறவினர்கள் துரிஞ்சிதலைப்பட்டியை சேர்ந்த அஞ்சலி (34), வேலூர் மாவட்டம் கே.மோட்டூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி…

சஜித்திடம் சுகநலன் விசாரித்த பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சுக நலன்கள் குறித்து விசாரித்துள்ளார். கொவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் பிரதமர் மஹிந்த தொலைபேசி வழியாக சஜித்தின் சுகல நலன்களை விசாரித்துள்ளார். ஏதேனும் உதவிகள் தேவையா எனவும் பிரதமர் இதன்போது சஜித்திடம் விசாரித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது பாரியார் ஜலனி பிரேமதாச ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தமது சுகநலன்களை விசாரித்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித், பிரதமருக்கு நன்றி பாராட்டியுள்ளார். ------- ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லப்படும், தீப்பிடித்த MV X-Press Pearl கப்பல் தற்போது கடலுக்குள் மூழ்கி வருவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த சிங்கப்பூருக்குச்…

அரசின் 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு இன்று முதல்

கடந்த வருடம் வழங்கப்பட்ட பெயர் பட்டியல் அடிப்படையில் பகிர்வு ஒருவருக்கு மேலதிகமாக 2,000 ரூபாவே வழங்கப்படவிருக்கிறது.வேறு வகையில் சொல்வதாக இருந்தால் தொடர்ந்து வழங்கப்படும் கொடுப்பனவு நிறுத்தப்பட்டு அதனை விட கூடுதலாக வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.இரண்டு கொடுப்பனவும் வழங்கப்படமாட்டாதென்றும் அவர் தெரிவித்தார். பயணக் தடையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் கடந்த வாரம் தீர்மானித்தது. இதன் முற்கட்டமாக இன்று முதல் சமுர்த்தி பயனாளிகளுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். அத்துடன், அரசால் வழங்கப்படும் 5,000க்கும் குறைவான கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு, தற்போது அவர்கள் பெறும் தொகையுடன் 5,000 ஈடுசெய்யும் வகையில் எஞ்சிய தொகை வழங்கப்படும். அதேபோல் பயணக்கட்டுப்பாட்டால் வருமானத்தை இழந்தவர்களுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படும். கடந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 5,000 ரூபா கொடுப்பனவு…