கொரோனா வறுமையால் விருதுகளை விற்ற பழம்பெரும் நடிகை

கொரோனாவால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறிவந்தார்.

பழம்பெரும் தெலுங்கு நடிகை பாவலா சியாமளா. இவர் 1984-ல் சேலஞ்ச் படத்தில் அறிமுகமாகி சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்த்ரா, கட்கம் கவுரி, பிளேடு பாப்சி, ரெயின்பொப். குண்டூர் டாக்கீஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் 2019-ல் மதுவடலரா படம் வந்தது. அதன்பிறகு கொரோனாவால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறிவந்தார்.

சியாமளாவின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது கஷ்ட நிலையை அறிந்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.1 லட்சம் உதவி வழங்கினார். இந்த நிலையில் வறுமை காரணமாக சியாமளா தனக்கு திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக வழங்கப்பட்ட விருதுகளை விற்று இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு காசநோய் உள்ளது. எனது மகளும் உடல் நலம் குன்றி இருக்கிறார். மருத்துவ செலவுகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஆகிறது. கொரோனா காலத்தில் யாரும் எனக்கு உதவவில்லை. எனவே எனது அத்தியாவசிய செலவுகளுக்காக எனக்கு வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தையும் விற்றுவிட்டேன்’’ என்றார்.

Related posts