டார்சன் பட நடிகர்- மனைவி உள்ளிட்ட 7 பேர் உயிர் இழப்பு

சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் ஹாலிவுட் நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர். அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு பாம்பீச் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அதில் விமானி உட்பட 7 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெர்சி பிரிட்ஸ் என்ற ஏரியில் விழுந்து மூழ்கிவிட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரதர்போர்ட் மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் ஒன்று மீட்கப்பட்டது. விமானத்தில் பயணித்த மற்ற 6 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையியே மூழ்கிய விமானத்தில்…

ராதா மோகனுக்குக் கடமைப்பட்டுள்ளேன்

இயக்குநர் ராதா மோகன் சாருக்குக் கடமைப்பட்டுள்ளேன் என்று கருணாகரன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ராதா மோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன். எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மலேஷியா டூ அம்னீஷியா'. இந்தப் படத்தின் மூலம் வைபவ் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மலேஷியா டூ அம்னீஷியா' படத்தில் கருணாகரன் கதாபாத்திரத்துக்குப் பாராட்டும், வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இயக்குநர் ராதா மோகன் சாருடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம். 'உப்பு கருவாடு' படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழக்கூடிய ஜனரஞ்சகமான படைப்புகள் தருவதில் அவருக்கு நிகர் அவரே. 'மலேஷியா டூ அம்னீஷியா'…

ஓடிடியில் வெளியாகிறதா ‘எஃப்.ஐ.ஆர்’?

விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்துள்ள 'எஃப்.ஐ.ஆர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் படம் 'எஃப்.ஐ.ஆர்'. இந்தப் படத்தில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். ஜனவரி 31-ம் தேதியுடன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்தது. இந்நிலையில், இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளதாகத் தெரிகிறது. இதன் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் படக்குழுவினர் எந்தவொரு விளம்பரமும் செய்யாமல் அமைதி காத்து வருகின்றனர். இதனிடையே, 'எஃப்.ஐ.ஆர்' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடந்தது. இதனை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் கைப்பற்றிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழுவினர்…

கரோனா தடுப்பூசியால் உருவான சர்ச்சை

கரோனா தடுப்பூசியால் சர்ச்சையில் சிக்கிய மீரா சோப்ரா, அதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடிகையாக வலம் வருபவர் மீரா சோப்ரா. தமிழில் 'அன்பே ஆருயிரே', 'ஜாம்பவான்', 'லீ', 'மருதமலை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு தனது சமூக வலைதளத்தில் அதற்கான புகைப்படத்தை வெளியிட்டார். அதன் பிறகுதான் மீரா சோப்ரா சர்ச்சையில் சிக்கினார். தன்னை முன்களப் பணியாளர் எனப் பதிவு செய்து முன்னிலைப்படுத்தி மீரா சோப்ரா தடுப்பூசி போட்டுக் கொண்டார் எனத் தகவல் வெளியானது. பலரும் அதற்கான அடையாள அட்டையையும் பகிர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து பலரும் மீரா சோப்ராவைக் கடுமையாகத் திட்டித் தீர்த்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவாகவே, மீரா சோப்ரா தனது…

யாழில் நேற்றைய தினம் 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள்

கொவிட் - 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் மக்களின் எண்ணிக்கையில் 52 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசி மருந்தை இன்று (31) முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ´சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் - 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு…

உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 21

அமைதியும் சுகமும் தரும் தேவன். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிராத்திப்போம். உன்அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன்அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.சங்கீதம் 122:7. மானிட உலகில் வாழ்க்கைப் பாதையானது எப்போதும் அவரவருக்கு நியாயமானதாக தோன்றும். ஆனால் நினையாத நேரத்தில் கால் தடுமாறி விழுந்துவிட நேரிடும் போதுதான் எமது பாதை பிழையானது என்று எண்ணத் தொடங்குகிறோம். சரியான பாதையிலும் இடர்கள் வரத்தான் செய்யும். எனினும் அங்கே ஒரு நம்பிக்கை நம்மைத் தைரியப்படுத்தும். அந்த நம்பிக்கைதான் என்ன? அது நாம் தேவனிடத்தில் வைக்கும் நம்பிக்கையே அந்த நம்பிக்கை. நாம் தேவனை நோக்கிப் பார்த்தோமானால் சறுக்கி விழுந்தாலும் நிச்சயம் எழுந்து நிற்போம். இன்றைய இந்த சிந்தனையை முழுமையாக விளங்கிக்கொள்ள சங்கீதம் 25தை வாசிப்போம். (வேதப்புத்தகம் உள்ளவர்கள் வாசிக்கவும்). இந்த சங்கீதத்தில் தாவீது முதலாவதாக, கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்,…