கணவர் கேட்டுக் கொண்டால் நடிப்பதை நிறுத்தி விடுவேன்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லு என்பவருடன் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றது. இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடனான இணையவழி கலந்துரையாடல் ஒன்றில் காஜல் பங்கேற்றார். அதில் சினிமாவிலிருந்து விலகுவது குறித்து அவர் பதிலளித்துள்ளார். இது குறித்து காஜல் கூறியதாவது: என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக…

கொரோனா வறுமையால் விருதுகளை விற்ற பழம்பெரும் நடிகை

கொரோனாவால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறிவந்தார். பழம்பெரும் தெலுங்கு நடிகை பாவலா சியாமளா. இவர் 1984-ல் சேலஞ்ச் படத்தில் அறிமுகமாகி சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்த்ரா, கட்கம் கவுரி, பிளேடு பாப்சி, ரெயின்பொப். குண்டூர் டாக்கீஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் 2019-ல் மதுவடலரா படம் வந்தது. அதன்பிறகு கொரோனாவால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறிவந்தார். சியாமளாவின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது கஷ்ட நிலையை அறிந்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.1 லட்சம் உதவி வழங்கினார். இந்த நிலையில் வறுமை காரணமாக சியாமளா தனக்கு திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக வழங்கப்பட்ட விருதுகளை விற்று இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா

நடிகை நயன் தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த நிலையில், நடிகை நயன் தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்தியில் தயாராகும் அஜித்குமாரின் ‘வீரம்’

சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து 2014-ல் திரைக்கு வந்த வீரம் படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க கட்டமறயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து வீரம் படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று அவர் விலகி விட்டார். தற்போது அவருக்கு பதிலாக சல்மான்கான் நடிக்க வீரம் ரீமேக் பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்துக்கு பை ஈத் கபி தீவாளி என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே தேர்வாகி உள்ளார். அவர் கூறும்போது சல்மான்கானுடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கொரோனா அடங்கியதும்…

ஓரிரு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் – தேமுதிக

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, அதிகாலை 3:30 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது

மட்டக்களப்பு நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை நேற்று (18) கைது செய்து, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நினைவேந்தல் நிகழ்வை தலைமை வகித்தவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு அவருடைய வீட்டிற்கு 3 தடவைகள் பொலிஸார் சென்ற போதும், அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரின் மனைவியார் அதனை பெறமாட்டேன் என தெரிவித்த நிலையில் அவரின் வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை பொலிஸார் ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட லவக்குமார் நேற்று பகல்…