பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

—–

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக இன்று 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 2,30,168 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில் இந்திய பயணிகள் இலங்கை வர தடை விதிக்கப்படுவதாக, இலங்கை விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

—–

உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோ மற்றும் மீரட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் அலகாபாத் ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத குற்றம் இழைத்துள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து லக்னோ, மீரட் மாவட்ட கலெக்டர்கள் 48 மணி நேரத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.

Related posts