மம்தா பானர்ஜிக்கு கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் வாழ்த்து

மேற்கு வங்காளத்தில் 202- தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கு அக்கட்சி ஆட்சியை தக்க வைக்கும் எனத்தெரிகிறது.

மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க உள்ளது.

இன்று மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக 83 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி செல்லும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். மம்தா பானர்ஜி 30 ஆயிரத்து 655 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 34 ஆயிரத்து 430 வாக்குகள் பெற்றுள்ளார்.

சுவேந்து அதிகாரியை விட 3 ஆயிரத்து 775 வாக்குகள் பின் தங்கிய நிலையில் மம்தா பானர்ஜி உள்ளார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மீனாட்சி முகர்ஜி 1,880 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தகவல் 3.30 மணி நேர நிலவரம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
—–
மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை 1,200வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.

நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது . நந்திகிராமில் கடந்த 2007ல் ரசாயன ஆலைக்கு எதிரான நந்திகிராம் போராட்டத்தை முன்னெடுத்தவர் சுவேந்து அதிகாரி. இதனால், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து அதிகாரி கடும் சவாலாக இருந்தார்.

Related posts