’வலிமை’யில் அஜித் உழைப்பு: கார்த்திகேயா பகிர்வு

'வலிமை' படத்துக்காக அஜித்தின் உழைப்பு குறித்து நடிகர் கார்த்திகேயா பகிர்ந்துள்ளார். தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், நேற்று (மே 1) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இது அவருடைய 50-வது பிறந்த நாள் என்பதால் பல்வேறு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் நடிகர் கார்த்திகேயாவின் வாழ்த்து பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் வில்லனாக நடித்து வருகிறார் கார்த்திகேயா. இது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அஜித்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கார்த்திகேயா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "சர்வதேச உழைப்பாளர்கள் தினத்தன்று தல அஜித்தின் பிறந்த நாள். இது யதேச்சையான ஒன்றாக இருக்கலாம். ஆனால், உடலில் எக்கச்சக்க காயங்களையும் மீறி ஒவ்வொரு காட்சியிலும் அவரது கடின உழைப்பைப் பார்க்கும்போதும்,…

ரன்வீர் சிங் படத்துக்கும் இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் 'சர்க்கஸ்' திரைப்படத்துக்கு இசையமைக்க தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'சிம்பா' திரைப்படத்துக்குப் பின் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 'சர்க்கஸ்' திரைப்படத்தில் ரன்வீர் நடிக்கிறார். இதில் பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். முதன்முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். இது குல்ஸார் இயக்கத்தில் 1982ஆம் ஆண்டு வெளியான 'அங்கூர்' என்கிற இந்திப் படத்தின் சமகால ரீமேக் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிறக்கும்போதே பிரிந்துபோன இரட்டையர்கள் மீண்டும் ஒன்றாகச் சேரும்போது நடக்கும் நகைச்சுவைக் குழப்பங்களே இந்தப் படம். தற்போது இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒரு துள்ளலிசைப் பாடல், ஒரு காதல் பாடல் என ஏற்கெனவே இந்தப் படத்துக்காக இரண்டு பாடல்களை அவர் இசையமைத்து அதில்…

ஸ்டாலினுக்கு விஷால் வாழ்த்து

நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஷால். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், நடிகருமான விஷால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "இந்த அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள். அன்பு நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோருக்கு நன்றி. நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறேன். அடுத்த சில…

வறுமையில் வாடிய இந்திய ஆணழகன் கொரோனாவுக்கு பலி

வறுமையில் வாடிய இந்திய ஆணழகன் ஜெகதீஷ் லாட் கொரோனாவுக்கு பலியானார். இந்திய ஆணழகன் பட்டத்தை வென்றவர் ஜெகதீஷ் லாட் (வயது 34). மும்பையை அடுத்த நவிமும்பையை சேர்ந்த இவர் சர்வதேச அளவிலான போட்டியிலும் வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நவிமும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதரா சென்று உள்ளார். அங்கு மனைவி, மகளுடன் தங்கி ஜிம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் கடந்த ஆண்டு மார்ச் முதல் வேலையில்லாமல் வறுமையில் வாடி உள்ளார். வாடகை கொடுக்காததால் ஜெகதீஷ் லாடை அவரது வீட்டின் உரிமையாளர் ஊரை விட்டு வெளியேற விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. வறுமை காரணமாக அவர் முழு அளவில் உடற்பயிற்சியையும் தொடர முடியவில்லை என்று கூறப்பட்டது. இந்தநிலையில் ஜெகதீஷ் லாட்டிற்கு கடந்த சில…

மம்தா பானர்ஜிக்கு கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் வாழ்த்து

மேற்கு வங்காளத்தில் 202- தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கு அக்கட்சி ஆட்சியை தக்க வைக்கும் எனத்தெரிகிறது. மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க உள்ளது. இன்று மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக 83 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி செல்லும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை…

இந்தியாவில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. கடந்த 22-ந்தேதி தொடங்கி 9 நாட்கள் தொடர்ந்து தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று, இந்தியாவில் தாக்கி வந்தது. இந்த சூழலில் நேற்றைய கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி பதிவாகி இருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 57 ஆயிரத்து 457 ஆக…