உன்னதத்தின் ஆறதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 12

பாவத்தை வெறுத்துவிடு.

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்திப்போம்.

ஒன்பதாம் மணிநேரத்தில் இயேசு, ஏலி ஏலி லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்.அதற்கு என் தேவனே; என்தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மத்தேயு 27. 46

தாவீது பாடிய 22ம் சங்கீதம் அவரைச் சூழு;ந்த மரணஆபத்தின் மத்தியிலிருந்து பாடிய சங்கீதமாக இருந்தாலும், அது தீர்க்கதரிசனமாக பாடப்பட்ட சங்கீதமாகத் தெரிகிறது. அப்படியே ஆண்டவராகிய இயேசுவும் சிலுவையிலிருந்து என் தேவனே, என்தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார். மேய்யாகவே இயேசு கைவிடப்பட்டாரா? ஏன் அப்படிக் கதறினார்? நாம் எப்பவேனும் சிந்தித்துப் பார்த்தது உண்டா?

புhவம் இல்லாதவரான, குற்றம் செய்யாதவரான இயேசு சிலுவையில் தொங்கினார். பாடுபட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் என்று அறிகிறோம். அதன் ஆழத்தை, தார்ப்பரியத்தை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. புhவம் இல்லாதவர் ஏன் பாவமாக்கப் பட்டார்? ஒருகணம் இப்போதாவது சிந்தித்துப்பார்ப்போம்.

ஆம், உலகத்தின் பாவம், ஆதாம் செய்த பாவத்தின் விளைவு இன்று நம்மேல் சந்ததி சந்ததியாக எம்மைத் தொடர்கிறது. அதன் விளைவு பாவத்தால் தேவனுடன் தொடர்பற்ற வாழ்வு எம்மைத் தொடர்கிறது. அதன் நிமித்தமாக இயேசுவின்மேல் சகல மக்களின் பாவமும் வந்தது. அதனால் மகாபரிசுத்த தேவன் பாவி என்று அவமதிக்கப்பட்டவராய், அருவருக்கப்பட்டவராய் சிலுவையில் தொங்கினாரே. இதை ஏன் நாம் மிக இலகுவாக எடுத்துக்கொள்கிறோம்.

வாழ்வில் சகல நம்பிக்கைகளும் அற்றநிலையில் தன் வாழ்வை கெடுத்துப்போட்ட சகோதரி, ஒரு பெரியவெள்ளி ஆராதனைக்கு ஆலயத்திற்கு வந்து உட்காந் திருந்தாள். பாடல்கள், ஜெபங்கள் என்று தொடர்ந்தாலும், எதிலும் பற்றற்றவளாக இருந்த அவளை ஏதோ ஒன்று ஈர்த்தது. “நீ மரிக்காமல் இருப்பதற்காகவே தாமாக மரணத்தை ஏற்றுக்கொண்ட இந்த இயேசு உனக்கிருக்க, நீ எங்கே அலைந்து திரிகிறாய்” என்ற பிரசங்க வார்த்தை அவளை உலுப்பியது. அன்றே அவள் வாழ்வில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

அன்பான அலைகள் வாசகநேயர்களே, பிதாவின் பிரசன்னத்திலிருந்து விலகாத இயேசுவானவர், நமது பாவங்களைச் சுமந்ததால் பிதாவின் முகத்தைப் பார்க்க முடியாமல் தவிர்த்தார். நாம் தேவபிரசன்னத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஆண்டவரே இந்தத் தண்டனையை ஏற்றுக் கொண்டார். ஏத்தனை கொடிய தண்டனையை நாம் அவருக்குக் கொடுத்திருக்கிறோம் என்பதை நாம் சிந்திப் பதில்லை. இதெல்லாம் தெரிந்தும் நமது வாழ்வில் எத்தனை விழுகைகள், எத்தனை அழுகைகள்.

தேவபிள்ளையே, வாழ்வுகளை முற்றிலும் அழித்துப்போடக்கூடிய அந்த கொடிய பாவம் நம்மை ஒருபோதும் விடாது. ஆனால் நாமேதான் அதனை விட்டுவிடவேண்டும். அருவருத்துத் தள்ளவேண்டும். ஏதைத் தள்ளவேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதுவே நம்மை அதிகமாக நெருங்கிவரும். அதற்கு இடமளித்து என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று சொல்லாமல், தேவனே என்னைத் தாங்கும் என்று இப்போதே நம்மை ஒப்புவிப்போம். நம்மோடு ஒட்டியிருக்கும் பாவம் இன்னதென்று இனங்கண்டு, தேவபாதத்தில் விழுவோம். அந்நேரமே கொடிய பாவத்தில் இருந்து விடுதலை பெற்றதை உணரமுடியும். வாழு;விலும் மகிழ்ச்சியை, அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியைக் காணமுடியும். அந்த நம்பிக்கையுடன் இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து தேவனிடத்தில் ஒப்புவி.

அன்பின் ஆண்டவரே, என்னை பாவங்கள் சாபங்கனில் இருந்து விடுதலைப்படுத்தி மகிழ்வுடன் வாழவைப்பதற்காக எனக்காக சாபமான சிலுவையை தெரிந்தெடுத்து, எனக்காக உமது உயிரைக் கொடுத்து என்னை மீட்டதற்காக நன்றி அப்பா. இனிவரும் காலங்களில் கொடிய பாங்களை வெறுத்து, நீர் விரும்பும் வாழ்வு வாழ எனக்கு உதவிசெய்து என்னைக் காத்துக்கொள்ளும் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Related posts