விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்

கொரோனா விதிகளை கடைபிடிக்காததால் நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம். பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு நேற்று காலை நடந்தது. இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை பார்வையிட மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் காலை முதலே அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, படப்பிடிப்பின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. முக கவசம் அணியவில்லை. அப்போது, அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், படக்குழுவினருக்கு ரூ.1,500 அபராதம் விதித்தனர்.

ரூ.6 கோடிக்கு கார் வாங்கிய பிரபாஸ்

பிரபாஸ் புதிதாக ரூ.6 கோடி மதிப்புள்ள லம்போர்கினியின் அவெண்டடார் சொகுசு காரை வாங்கி இருக்கிறார். வசூல் சாதனை நிகழ்த்திய பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான பிரபாஸ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தொடர்ந்து நடித்த சாஹோ படமும் வெற்றி பெற்றது. இந்த படங்கள் தமிழிலும் வெளியானதால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். தற்போது ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆதிபுருஷ் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகிறது. இதில் பிரபாஸ் ராமராக நடிக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலிலும் பிரபாஸ் இடம் பிடித்துள்ளார். சாஹோ படத்துக்கு ரூ.70 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. தற்போது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி இருப்பதாகவும் லாபத்திலும் பங்கு கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பிரபாஸ் புதிதாக…

நடன நிகழ்ச்சி குழுவைச் சேர்ந்த 18 பேருக்கு கொரோனா

நடிகை மாதுரி தீட்சித் நடுவராகப் பங்கேற்கும் டான்ஸ் தீவானே என்கிற டிவி நடன நிகழ்ச்சியின் குழுவைச் சேர்ந்த 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரபல நடிகையான மாதுரி தீட்சித், கடைசியாக 2019-ல் வெளியான கலான்க் என்கிற படத்தில் நடித்தார். 2018 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் தீவானே என்கிற நடன நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் 3-வது பருவம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் டான்ஸ் தீவானே படப்பிடிப்பில் பங்கேற்ற 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வாரமும் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் கொரோனா இல்லை என உறுதியான பிறகு படப்பிடிப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதர ஊழியர்களைக் கொண்டு படப்பிடிப்பு…

புலிகளுக்கு ஆதரவான எவருடனும் பேச்சில்லை

புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுடன் அரசாங்கம் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள மாட்டாது. இலங்கையை துண்டாடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து செயற்படுவதாலே சிலர் தடைசெய்யப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் ஊடக மாநாட்டிலே அவர் இவ்வாறு கூறினார். புலம்பெயர் (டயஸ்போரா) அமைப்புகள் பலவற்றை அரசாங்கம் தடைசெய்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் , யூதர்கள் வெளியேற்றப்பட்ட போது டயஸ்போரா என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அதுபோன்று இங்கு யாரும் வெளியேற்றப்படவில்லை. டயஸ்போரா என்பது இங்கு பொருந்தாது. வெளிநாடுகளிலுள்ள இலங்கை சமூகங்களுடன் தேவையான கலந்துரையாடல்களை அரசு செய்து வருகிறது. எல்.ரீ.ரீ.ஈ இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பு. நாட்டை துண்டாடுவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. யாராவது எந்த நாட்டில் இருந்தாவது புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்களையும் நாட்டை துண்டாடுவதற்கு ஊக்கம் அளிப்பவர்களையும் அரசாங்கம் தடை செய்யும். அவர்களுடன் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாது. வெளிநாடுகளில்…

அரசாங்கத்தின் செயற்பாடு தமிழ் மக்களை பழிவாங்குவது !

ஜெனிவா தீர்மானத்திற்கு பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடு தமிழ் மக்களை பழிவாங்குவது போன்றே அமைந்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு ஜெனிவா தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறும் கருத்து ஏற்புடையது அல்ல என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். ----- அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாவாக பதிவாகியுள்ளது. ----- மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்தங்களை கொண்டுவருவதில் அவசியம் உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற…