விஜய்யின் கடைசிப் படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’(கோட்).

இதில் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார்.

இந்தக் கட்சி 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளது.

இதனால் ‘தி கோட்’ படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தில் அவர் நடிக்கிறார்.

அது அவருடைய கடைசிப் படம் என்று கூறப்படுகிறது. அதை ஹெச்.வினோத் இயக்க இருக்கிறார்.

விஜய்யின் 69- வது படமான இதில், நாயகிகளாக சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய்யுடன் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களில் ஏற்கெனவே சமந்தா நடித்துள்ளார்.

விஜய்யின் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

Related posts