இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதமாவது ஏன்?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. ஏற்கனவே கிரேன் விழுந்த விபத்தினால் படப்பிடிப்பை நிறுத்தினர். பின்னர் கொரோனா தடங்கலாக வந்தது. தற்போது கமல்ஹாசன் தேர்தலில் தீவிரமாகி இருக்கிறார். விக்ரம் என்ற இன்னொரு படத்தில் நடிப்பதாகவும் அறிவித்து உள்ளார். இதனால் இந்தியன்-2 படத்தின் கதி என்ன என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்புக்கான தாமதத்தை காஜல் அகர்வால் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறும்போது, “இந்தியன்-2 படத்தில் அமெரிக்காவை சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றுகின்றனர். அவர்கள் இந்தியாவுக்கு வந்து இந்தியன்-2 படத்தில் பணியாற்ற வேண்டி உள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவர்களால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. அதனால்தான் இந்தியன்-2 படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. இந்தியன்-2 படப்பிடிப்புக்கான தாமதத்துக்கு இதுதான் காரணம். கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன்-2 படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறேன்’’ என்றார்.

Related posts