உன்னதத்தின் ஆறதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 9

இயேசுகிறிஸ்துவின் பாடுகள் மூலமான சுதந்திரமும் அதிகாரமும்.

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக ஜெபிப்போம்.

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். யோவான் 16:24.

தபசுகாலம் அல்லது, பாஸ்காகாலம் என அழைக்கப்படும் இயேசுவின் சிலுவைப் பாடுகளையும், அவரின் மரணத்தையும் நினைவுகூரும் காலமாக இம்மாதம் இருப்பத னால், சிலுவை மரணத்தையும் அதனால் மனுக்குலம் அடையும் நன்மைகள் பற்றியும் அலைகள் நேயர்கள் அறிந்து கொள்வது சாலச்சிறந்தது.

பரிசுத்த வேதாகமத்தின் ஊடாக பல ஆசீர்வாதங்களை, வாக்குறுதிகளை தேவன் நமக்குத் தந்துள்ளார். ஆனால் அந்த ஆசீர்வாதங்களை வாக்குறுதிகளை நாம் அடைய வேண்டும் என்றால், இயேசு மூலமாகத்தான் அடையமுடியும். இதனையே நாம் மேலே வாசித்தோம். பிதாவாகிய தேவன், மனிதன் நித்திய நித்திய காலமாக தம்முடன் வாழ வேண்டும் என்றுதான் மனுக்குலத்தைப் படைத்தார். கீழ்ப்படிய மறுத்ததன் காரமாக பாவம் மனிதனை தேவனிடம் இருந்து பிரித்துப் போட்டது. ஆனாலும் அவர் தமது மீட்புத்திட்டத்தை மாற்றிப் போடவில்லை.

அவரின் மீட்பின்பணி இயேசுகிறிஸ்துமூலம் சிலுவையில் நிறைவேறியது. தேவனு டைய வார்த்தைக்கு பணிந்து அந்த சிலுவை வழியாக நடக்கும்போது அந்த நித்திய வாழ்வை பெற்றுக் கொள்ளும் கிருபையை மனிதன் மீண்டும் பெற்றுக் கொள்கிறான்.

அன்று ஏதேன் தோட்டத்தில் மனிதன் சுதந்திரமாக விடப்பட்டபோது, அவனுக்கு ஒருசவால் இருந்தது. தெரிந்தெடுப்புக்கான சுதந்தரமும் அதிகாரமும் அவனுக்கு இருந்தது. அவன் அந்த சுதந்திரத்தை தப்பாக பாவித்து, தனக்கிருந்த அதிகாரத்தை இழந்து போனான்.

ஏதேனிலே காணப்பட்ட ஜீவவிருட்சத்திற்கு ஒப்பான ஜீவவிருட்சத்திற்கான வழியும் அதன் மீதுள்ள அதிகாரமும் கிறிஸ்துவுக்கூடாக நித்தியத்திலே நமக்கு கிருபையாக திரும்பவும் கிடைக்கிறது. இதனை வெளிப்படுத்தல் 22:14 மிகத் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஜீPவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்கள் ஆவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

இந்த நித்தியத்திற்குள் பிரவேசிக்கும் ஒருவன் திரும்பவும் அந்த கிருபையை இழந்து போவானோ? இல்லை. ஏனெனில் அந்த நகரத்திற்குள் எல்லோரும் பிரவேசிக்க முடியாது. இந்த நகரத்திற்குள் கள்ளவழியாக எவரும் பிரவேசிக்க முடியாது. இதன் நுளைவாயில் பரிசுத்த இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த இரத்தத்தில் தம்மை தோய்த்து வெளுத்தவர்களே அதில் பிரவேசிப்பார்கள். இதனை வெளி. 7:13-14 வார்த்தைகள் தெளிவு படுத்துகிறது. அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி, வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

அதற்கு நான், ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன், இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய (இயேசுவுடைய இரத்தத்தினால்) இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள் என்றான். இவர்கள் பிதாவின் சித்தத்தை மாத்திரம் செய்கிறவர்கள்.

பாவம் தேவனுக்கும் மனிதனுக்கும் பிரிவினையை உண்டாக்கி, ஒரு தடைச்சுவரை கட்டியெளுப்பியது. ஒருநாள் பிறந்தது, பாவத்துக்கு மனிதர் பலிசெலுத்துதல் இராமல், இயேசுவே தம்மை ஏக பலியாகத்தந்து, அந்த பாவம் என்ற தடைச்சுவரை தகர்த்திப் போட்டார். அவருடைய இரத்தம் பாவமன்னிப்பை நமக்கு தருகிறது. அது மட்டுமல்லாமல் தேவனைத்தேடும் பிள்ளைகள், தேவனிடம் தாமேசேர்ந்து ஜெபத்தினுடாக தேவனிடம் பேசக்கூடிய சிலாக்கியத்தை இயேசு சிலுவை மரணத்தின் மூலம் எமக்கு சம்பாதித்து கொடுத்துள்ளார்.

இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமும் உயிர்த்தெழுதலும் நமக்கு அநேக காரியங்களை வெளிப்படுத்துகிறது. அவை யாவற்றிலும் முக்கியமானது பிதாவாகிய தேவனுக்கும் நமக்கும் பிரிவினையாக இருந்த கீழ்படியாமை என்கிற தடைச்சுவர் நீக்கப்பட்டு, அப்பா பிதாவே என்கிற புத்திரசுவீகாரமான புதிய உறவு ஏற்பட்டது என்பது முக்கியமானதாகும்.

ஏதேனிலே பிரிந்த உறவு சிலுவையில் கட்டியெழுப்பப்பட்டது. அந்த உறவைக் குறித்து சற்று சிந்தி. அந்த உறவுக்குள் தஞ்சமடைந்து நித்திய ஜீவனை அடைந்து வாழும் வாழ்க்கை வேண்டுமா? அல்லது, பாவத்தின் அகோரத்தின் வேதனையில் வாழும் வாழ்க்கை வேண்டுமா? தெரிவுச் சுதந்தரம் உன்னுடையது. தேவனிடத்தில் அடைக்கலம் புகுந்து, அவருடைய இரத்தத்தால் பாவமன்னிப்பை அடைந்து, தேவனுடன் வாழும் வாழ்வை விரும்பினால் என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் ஒப்புக்கொடு.

அன்பின் பரலோக பிதாவே, இன்று உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் ஊடாக சிந்தப்பட்ட இரத்தத்தினால் என்னுடைய பாவங்கள் சாபங்களில் இருந்து நான் விடுதலையை அடையும் வழியை அறிய உதவியதற்காக நன்றி அப்பா. இதுவரை காலமும் உம்முடைய சிலுவை மரணத்தினால் மனுக்குலம் அடைந்த விடுதலையை அறியாமல் வாழ்ந்து வந்ததற்கு என்னை மன்னியும். இன்றிலிருந்து உமது மரணத்தினால் நான் அடைந்த பாவமன்னிப்பையும், நித்திய ஜீவனுக்கான பிரயாணத்தையும் நான் காத்து நடக்க எனக்கு உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts