ஷங்கர் – ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை?

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தில் தென்கொரிய நடிகை பே சூஜி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம், படப்பிடிப்புத் தளத்தில் விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது. அதற்கு முன்னதாகவே ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. இதில் நாயகனாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிக்கவுள்ளார். அவரோடு நடிக்க தென்கொரிய நடிகை பே சூஜியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. அவர் நாயகியாக நடிக்கவுள்ளாரா அல்லது வேறு…

‘நெஞ்சம் மறப்பதில்லை’ எஸ்.ஜே.சூர்யா

தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றவர்களை, நாயகி ஆவியாக வந்து பழிவாங்கும் கதையே 'நெஞ்சம் மறப்பதில்லை'. பணக்கார தம்பதியினரான எஸ்.ஜே.சூர்யா - நந்திதாவின் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பணிக்கு வருகிறார் ரெஜினா. அப்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஜினா மீது ஆசை வருகிறது. ஒரு கட்டத்தில் அவரை பாலியல் வன்கொடுமைச் செய்து கொலை செய்துவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. இதன் பிறகு என்னவாகிறது என்பதே 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைக்கதை. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் ஒரு வழியாக இன்று தான் வெளிச்சம் கண்டுள்ளது. இது ரொம்ப பழைய படமாச்சே என்று மனதளவில் தோன்ற வைக்காமல் இருந்ததே இந்தப் படத்தின் வெற்றி. வழக்கமான பழிவாங்கல் பேய்க் கதை என்றாலும் செல்வராகவன் டச் என்று அங்கங்கே தூவி விட்டுள்ளார். ஒவ்வொரு நடிகரிடமிருந்தும் இப்படியொரு கச்சிதமான நடிப்பை வாங்க செல்வராகவனால் மட்டுமே முடியும். அதே…

90 வயதிலும் ஆரோக்கியம்: சவுகார் ஜானகி மலரும் நினைவு

“சங்கரமஞ்சி ஜானகி என்ற எனது பெயர் சவுகார் படத்தில் நடித்த பிறகு சவுகார் ஜானகியாக மாறிவிட்டது. நான் 90 வயதை நெருங்குகிறேன். இப்போதும் எனது வேலைகளை நானே செய்கிறேன். 74 ஆண்டுகளுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்தேன். சவுகார் பட வசனத்தை தூக்கத்தில் எழுப்பி இப்போது கேட்டாலும் சொல்வேன். எனக்கு 15 வயதிலேயே பால்ய விவாகம் நடந்தது. விஜயவாடாவில் குடியேறினோம். கணவருக்கு வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். சென்னை வந்து தங்கி பல சோதனைக்கு பிறகு சவுகார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் எனக்கு ரூ.2 ஆயிரத்து 500 சம்பளம் தந்தனர். குடும்ப கஷ்டத்தில் இருந்து மீளத்தான் சினிமாவுக்கு வந்தேன். சிவாஜி கணேசன் ஆதரவு தந்தார். புதிய பறவை படத்தில் கவர்ச்சியாக நடித்த காட்சிக்கு வரவேற்பு கிடைத்தது. 500 படங்களிலும், 300 நாடகங்களிலும் நடித்து இருக்கிறேன். வருடத்துக்கு…

6,000 வாள்கள் இறக்குமதி; பேராயரின் மனு..

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்குள் 6,000 வாள்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இம் மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜூன ஒபேசேக்கர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் நிலவரம் என்னவென பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மாஅதிபரிடம் வினவி நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதியளிக்குமாறு சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி அவந்தி பெரேரா இதன்போது தெரிவித்துள்ளார். நேற்றைய விசாரணையின் போது, பேராயர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன, சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார். இதன்படி மனுமீதான…

உன்னதத்தின் ஆறதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 9

இயேசுகிறிஸ்துவின் பாடுகள் மூலமான சுதந்திரமும் அதிகாரமும். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக ஜெபிப்போம். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். யோவான் 16:24. தபசுகாலம் அல்லது, பாஸ்காகாலம் என அழைக்கப்படும் இயேசுவின் சிலுவைப் பாடுகளையும், அவரின் மரணத்தையும் நினைவுகூரும் காலமாக இம்மாதம் இருப்பத னால், சிலுவை மரணத்தையும் அதனால் மனுக்குலம் அடையும் நன்மைகள் பற்றியும் அலைகள் நேயர்கள் அறிந்து கொள்வது சாலச்சிறந்தது. பரிசுத்த வேதாகமத்தின் ஊடாக பல ஆசீர்வாதங்களை, வாக்குறுதிகளை தேவன் நமக்குத் தந்துள்ளார். ஆனால் அந்த ஆசீர்வாதங்களை வாக்குறுதிகளை நாம் அடைய வேண்டும் என்றால், இயேசு மூலமாகத்தான் அடையமுடியும். இதனையே நாம் மேலே வாசித்தோம். பிதாவாகிய தேவன், மனிதன் நித்திய நித்திய காலமாக தம்முடன் வாழ வேண்டும் என்றுதான் மனுக்குலத்தைப் படைத்தார்.…

நான் ஏன் பிறந்தேன்..! இன்றைய சிந்தனை 06.03.2021

நான் ஏன் பிறந்தேன்..! இந்தக் கேள்விக்கு வாழ்க்கை எல்லாம் விடை தேடி களைத்ததாக ஞானிகள் சொல்கிறார்கள். சிலர் இதை விளக்க முற்பட்டனர், அதன் மூலம் அது விளக்க முடியாத தத்துவம் என்பதை விளக்கியும் சென்றனர். இந்த ஒற்றைக் கேள்விக்கு விடை கண்டு பிடிக்கவே நீ இந்தப் பூமியில் பிறந்திருக்கிறாய், அதன் பெயர்தான் " வாழ்க்கைத் தேடல்.." வாழ்க்கை என்பது மைதானம் போன்றது, பயிற்சி எடுக்காத ஒருவன் மைதானத்திற்குள் இறங்க முடியாது. பந்து வருகிறது, தடுக்கிறான் ஆடுகிறான், சில நேரம் வெல்கிறான் பல தடவைகள் தோற்கிறான். ஒரு சாதாரண விளையாட்டிற்கே பயிற்சி எடுக்காமல் மைதானத்தில் இறங்க முடியவில்லை என்றால், இந்த வாழ்க்கை என்ற மைதானத்தில் மட்டும் பயற்சி எடுக்காமல் நீ வந்திருக்கிறாய் என்று எப்படிக் கூற முடியும்..? சரியான பயிற்சி இல்லாமல் இந்த பூமிப்பந்தில் இறங்க உன்னை ஒரு…