அமெரிக்காவுக்குச் செல்லும் தனுஷ்

தி க்ரே மேன்' ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக, நாளை அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார் தனுஷ். கடந்த ஆண்டு 'அவெஞ்சர்ஸ்' இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ், இந்தப் படத்தை 'தி க்ரே மேன்' என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் 'கேப்டன் அமெரிக்கா'வாக நடித்த க்றிஸ் ஈவான்ஸும், 'லா லா லேண்ட்', 'ஃபர்ஸ்ட் மேன்' ஆகிய படங்களின் நாயகன் ரயன் காஸ்லிங்கும் நடிக்கின்றனர். அவர்களுடன் தனுஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது என்பதே தெரிவிக்கப்படாமல், முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. தற்போது 'தி க்ரே மேன்' படப்பிடிப்பு அமெரிக்காவில் 2…

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா, தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என்று பதிவிட்டுள்ளார்.

அனுஷ்காவின் ‘மீ டூ’ அனுபவம்

அனுஷ்காவின் ‘மீ டூ' அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:- சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகைகள் பலர் மீ டூவில் பேசி வருகிறார்கள். நடிகர்கள். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவும் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பலரும் மீ டூவில் புகார் சொல்கிறார்கள். படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். திரைத்துறை கவர்ச்சி மிகுந்தது. அதனால் இங்கு நடப்பது பெரிய விஷயமாக பேசப்படுகிறது. பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலுமே இருக்கிறது. நானும் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த தொல்லையை சந்தித்தேன். ஆனாலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. நான் நேர்மையாக…

தனுஷ் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட ரசிகர்கள் எதிர்ப்பு

தனுஷ் ரசிகர்களும் ஓ.டி.டியில் ஜகமே தந்திரம் படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டி வருகிறார்கள். கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்துக்கு ஒரு ஓ.டி.டி தளம் அதிக விலை கொடுக்க முன்வந்து இருப்பதாகவும் இதனால் ஓ.டி.டியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தனுசுக்கு ஓ.டி.டியில் படத்தை வெளியிட விருப்பம் இல்லை. டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ''திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தனுஷ் ரசிகர்களும் ஓ.டி.டியில் ஜகமே தந்திரம் படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டி வருகிறார்கள். அந்த சுவரொட்டிகளில் ''தனுசின் வெற்றி படமான…

சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம்..

சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் உள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து விட்டு, விடுதலையான சசிகலா, கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் அதில் குணமடைந்த அவர் பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்தார். இந்தநிலையில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார். பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்ட சசிகலாவிற்கு அ.ம.மு.க. கட்சி சார்பில் ஆரத்தி எடுத்தனர். பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்ட சசிகலாவின் காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும்…

சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த STF மீளப்பெறப்பட்டுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. "நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. காரணம் அறிவிக்கப்படவில்லை" என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்பு கடமையில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ----- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்பை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர்,…