அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை

அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என்று பிரதமர் மோடி, தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி 74-வது முறையாக இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது,…

முதல் பார்வை: ஏலே

ஊரில் ஐஸ் வண்டி வைத்து ஓட்டிப் பிழைப்பை நடத்தியிருக்கும் முத்துக்குட்டி எல்லா இடங்களிலும் அடாவடி செய்து, பணம் கடன் வாங்கி, ஏமாற்றி, குடித்து, ஆட்டம் போட்டு என மற்றவர்களைப் பற்றிய கவலை இல்லாமல் வாழ்ந்தவர். தங்களைக் கவனிக்காமல் தன்னை மட்டுமே கவனித்துக் கொண்ட முத்துக்குட்டியை இந்தக் காரணத்தினாலேயே அதிகமாக வெறுக்கிறார் மகன் பார்த்தி. முத்துக்குட்டி வயது மூப்பின் காரணமாக இறந்துபோக, தந்தைக்குத் தனது கடைசி கடமையைச் செய்ய சென்னையிலிருந்து கிராமத்துக்கு விரைகிறார் பார்த்தி. அங்கு சகோதரி மீனா, நண்பர்கள், வேறொரு திருமணத்துக்குத் தயாராக இருக்கும் முன்னாள் காதலி நாச்சியா எனப் பலரும் இருக்க, பார்த்திக்கு கடந்த கால சம்பவங்கள் கண்முன் வந்து போகின்றன. முத்துக்குட்டி உண்மையிலேயே அப்படி ஒரு சுயநலப் பேர்வழியா? அப்பா- மகன் உறவின் விரிசல் சரியானதா? பார்த்தியின் முன்னாள் காதலியுடனான பிரச்சினை தீர்ந்ததா? போன்ற…

நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா

நலன் குமாரசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார். 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அதனைத் தொடர்ந்து இயக்கவுள்ள படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதற்காகக் கதைகள் எழுதி வந்தார் நலன் குமாரசாமி. அந்தப் படத்துக்கு முன்பாக 'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜியில் ஒரு கதையை இயக்கியிருந்தார். அதில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் இருவரும் நடித்திருந்தனர். அதற்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது, இதனைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கவுள்ள அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. தற்போது அந்தப் படத்தின் நாயகனாக ஆர்யா நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக…

ஒரே நேரத்தில் பல கதைகளில் பணிபுரிவது எப்படி?

ஒரே நேரத்தில் பல கதைகளில் பணிபுரிவது குறித்து இயக்குநர் கெளதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கெளதம் மேனன், சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது திரையுலகினர் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அன்றைய தினம் தான் இயக்கவுள்ள சிம்பு படத்தின் தலைப்பை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். ஒரே சமயத்தில் 2,3 படங்களில் பணிபுரிவது கெளதம் மேனன் பாணி. இப்போது கூட 'ஜோஷ்வா' படத்தில் பணிபுரிந்துகொண்டே அடுத்து இயக்கவுள்ள சிம்பு படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார். இது அவருக்குப் புதிதும் அல்ல. இதற்கு முன்னதாக சில படங்களை இப்படி இயக்கியும் உள்ளார். "ஒரே நேரத்தில் பல கதைகளில் பணியாற்றுவது" குறித்த கேள்வியை கெளதம் மேனனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: "நான் அதைச் செய்தாலும்…

‘பாகுபலி 2’ சாதனையை முறியடித்துள்ளது ‘மாஸ்டர்’ வசூல்.

தமிழகத்தில் 'மாஸ்டர்' படத்தின் வசூல் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்த இந்தப் படத்தை லலித் குமார் வெளியிட்டார். சுமார் ஒரு வருடம் காத்திருப்புக்குப் பிறகு, பொங்கல் விடுமுறைக்கு இந்தப் படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலுமே இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை 'பாகுபலி 2' நிகழ்த்தி இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்துள்ளது 'மாஸ்டர்' வசூல். இது தொடர்பாக முன்னணி விநியோகஸ்தர் ஒருவரிடம் விசாரித்த போது, "சரியான வசூல் தொகை எவ்வளவு என்பது 'மாஸ்டர்' படத்தை வெளியிட்ட லலித்குமாருக்குத்…

இந்தியாவின் பிரதிநிதி ஐ.நா.வில் பேச்சு

“தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதை இந்தியா பரிந்துரைக்கிறது” என ஜெனிவாவிற்கான இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது இந்தியாவின் விருப்பம் என இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46-வது கூட்டத்தொடரில் உரையாற்றிய இந்திரா மணி பாண்டே பேசியதாவது: “இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை மற்றும் அவரது உரையின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இலங்கையுடன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் பக்கத்து நாடு என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விஷயத்தில் முன்னின்று செயற்படுகின்றது. எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது. 1. இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு 2.…

பேரணியில் சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை

பொலிகண்டி பேரணியை ஏற்படுத்திய சிவில் அமைப்புக்கள் அது எதற்காக நடாத்தப்படுவதாக தெரிவித்து 10 காரணிகளை பலதரப்பிற்கும் அனுப்பியிருந்தது. அந்த கோரிக்கைகளை முன்வைத்தே அது ஆரம்பிக்கப்பட்டது. அதிலே சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை என தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (27.02) இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஒற்றுமையான முன்னெடுப்பு என்பது அரசியல் கூட்டோ தேர்தல் கூட்டோ அல்ல. தமிழர்களிற்கு எதிரான விடயங்களில் அனைத்து தரப்புகளும் ஒன்று சேரவேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் மக்கள் மத்தியிலே இது தொடர்பான எதிர்பார்ப்புக்களும் இருக்கிறது. எனவே அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அந்த…