தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது

கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது.கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு 2 மணி நேரத்தில் தடுப்பூசிக்கான ஒத்திகை நடக்கிறது.

ஊசி எதுவும் போடாமல் சுகாதார பணியாளர்கள் ஒத்திகையில் மட்டுமே ஈடுபட உள்ளனர். சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை உள்பட 3 இடங்களிலும், நீலகிரியில் உதகை மருத்துவ கல்லூரி, குன்னூர் அரசு மருத்துவமனை உள்பட 3 இடங்களிலும், நெல்லையில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களிலும், பூந்தமல்லியில், அரசு மருத்துவமனை, நேமம் பொது சுகாதார மையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.கோவை அரசு மருத்துவமனை, சூலுார் அரசு மருத்துவமனை, பூலுவப்பட்டி சமுதாய சுகாதார நல மையம்.நெல்லை அரசு மருத்துவமனை, சமாதானபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா செயலி சரியாக செயல்படுகிறதா, தடுப்பூசி வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அசாம், ஆந்திரம், பஞ்சாப், குஜராத்தில் ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது.

Related posts