இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் ?

இந்தியாவில் எப்போது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில் வெற்றியைடைந்த சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த பல்வேறு உலக நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்து உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் முடக்கியுள்ளன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பான அடுத்தகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் சீனா, அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது வரை 23 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கும் என்றும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெரிவிக்கப்பட்டது.

Related posts