பிசாசு 2′ ஃபர்ஸ்ட் லுக்; சுவாரசியப் பின்னணி

பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டதன் சுவாரசியப் பின்னணியைப் பகிர்ந்துள்ளார் ஆண்ட்ரியா. மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள படம் 'பிசாசு 2'. ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். நேற்று (டிசம்பர் 21) ஆண்ட்ரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மிஷ்கின். 2015-ம் ஆண்டு ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பாட்டியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை அப்படியே 'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக உருவாக்கி இருந்தது படக்குழு. இது எதார்த்தமாக நடைபெற்றதா அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. இது தொடர்பான சுவாரசியப் பின்னணியைப் பகிர்ந்துள்ளார் ஆண்ட்ரியா. தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: " 'பிசாசு…

பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி !

பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இசையமைப்பாளர் இளையராஜா செல்லலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை வலியுறுத்தியது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து இளையராஜா சென்னை ஐகோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “பிரசாத் ஸ்டூடியோவில் இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அரங்கில் ஒரு நாள் சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். கைப்பட எழுதிய இசை கோப்புகள், இசை கருவிகள், தனக்கு கிடைத்த விருதுகள் ஆகியவை அங்கு…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் ?

இந்தியாவில் எப்போது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில் வெற்றியைடைந்த சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த பல்வேறு உலக நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்து உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் முடக்கியுள்ளன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பான அடுத்தகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடிக்கு…

8 பேருக்கு கொரோனா ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார். இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் ரஜினிக்கு நெகட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினி சென்னை திரும்ப இருக்கிறார்.

பாரியளவிலான கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை

நத்தார் பண்டிகை மற்றும் 2021 புதுவருட பிறப்பை முன்னிட்டு பாரியளவிலான கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி இல்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில், நத்தார் தினத்துக்கும், 2021 ஆம் ஆண்டுக்கான புதுவருட பிறப்புக்கும் இன்னமும் சில தினங்களே உள்ளன. அதற்கமைய கடந்த வருடங்களைப் போன்று இந்த நிகழ்வுகளை கொண்டாடும் வகையில் பாரியளவிலான கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்த இம்முறை அனுமதி வழங்கப்படமாட்டாது. எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய அனைவரும் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் இணைந்து வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக பாரியளவிலான கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதால் வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வைரஸ் பரவலை…