20இற்கு வாக்களித்தோர் மீது நடவடிக்கை எடுத்தல் அவசியம்

20ஆவது திருத்தத்திற்கு சார்பாக வாக்களித்த 08 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும், அந்தந்த கட்சிகள் மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு எதிராக ரவூப் ஹக்கீம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரே முன்னிலையாகி வாதாடினார். ஆனால் அவரின் கட்சி உறுப்பினர்கள் ’20’ இற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீமும், ரிஷாட்டும் நாடகமாடுகின்றனர் என்ற சந்தேகமும் எழும்.

அதுமட்டுமல்ல அவர்களின் கட்சிகளுடன் இணைந்து செயற்படமுடியாத நிலையும் ஏற்படும். 20 இற்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கின்றோம்.என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

யாழில் (30) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அணியாக, 20ஆவது திருத்தத்தை எதிர்த்திருந்தாலும் கூட, துரதிஷ்டவசமாக எதிரணியிலிருந்த 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் சார்பாக வாக்களித்ததன் காரணமாகத் தான்,20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்ற முடிந்தது.

இது ஒரு துரதிஷ்டவசமானது, இது ஜனநாயக விரோத நகர்வு, சார்பாக வாக்களித்தவர்கள் கூட, மக்கள் மத்தியில் எந்தவித கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை. எவ்வாறு ஆதரிக்கப்போகின்றோம் என்றும் கூறவில்லை. ஆகையினால், இந்த வாக்களிப்பிலே, சார்பாக வாக்களித்தவர்கள் தவறான ஒரு செயலைச் செய்துள்ளார்கள். மக்கள் அவர்களுக்கு கொடுத்த ஆணைக்கு மாறாக செயற்பட்டுள்ளார்கள். அவர்களுடைய அரசியல் கட்சிகள், அவர்களுக்கு எதிராக மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை என்றார்.
—–
மிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளமையானது, வெட்கக் கேடான விடயமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே,இவ்வாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது,…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டிய நபர்கள், ஆளும் தரப்புடன் இணைந்து, இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்ககுமாறு கோரி, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கோரிக்கை மனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளமையானது, ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக திலகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள நிலையிலேயே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

20 ஐ நிறைவேற்றுவதன் மூலம் சர்வாதிகாரப் போக்கு ஏற்படும் என, கோஷம் எழுப்பிய நபர்களே, தற்போது ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மனிதாபிமான அடிப்படையிலேயே, தாம் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் முன்வைக்கப்படுகின்ற இவ்வாறான காரணங்கள், சிறுபிள்ளைத்தனமாகவே காணப்படுவதாக திலகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த கடிதத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட போதிலும், தான் கையெழுத்திடவில்லை என முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டார்.
2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டனர்.

இதன்படி, குறித்த கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்பில், துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தடண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கோரிக்கை மனுவில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 160 பேர், கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts