விஜய் ஜேசுதாஸ் அதிரடி.. சரவெடி.

பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ், 20 ஆண்டுகளாக சினிமாவில் பாடிக்கொண்டிருக்கிறார். கானகந்தர்வன் கே.ஜே.ஜேசுதாசின் மகனான இவர், தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், துளு போன்ற பலமொழிகளில் பின்னணி பாடியுள்ளார். கேரள மாநில அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார். தற்போது, ‘இனி மலையாள சினிமாக்களுக்கு பாடமாட்டேன். அந்த அளவுக்கு இந்த திரை உலகம் எனக்கு சோர்வினை தந்திருக்கிறது’ என்கிறார். அது பற்றி விளக்குகிறார்.. “மலையாளத்தில் இசை அமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் தகுதிக்கான பணம் கிடைப்பதில்லை. தமிழிலும், தெலுங்கிலும் இந்த பிரச்சினை இல்லை. அதனால் ஏற்பட்ட சோர்வினால்தான் இந்த முடிவினை எடுத்திருக்கிறேன். மலையாளத்தில் ‘செலக்டீவ்வாக’ பாடக்கூட எனக்கு விருப்பம் இல்லை. கோடிகளை முதலீடு செய்து சினிமாவை உருவாக்கும் தயாரிப்பாளர்கள் நடிகர்- நடிகைகளுக்கு பெரிய சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் தகுதியான சம்பளத்தை தர தயங்குகிறார்கள். சமீபத்தில் பிரபலமான தயாரிப்பாளர்…

படங்களில் நடிப்பேன் காஜல் அகர்வால் பேட்டி..!

பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்‘ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், காஜல் அகர்வால். இவர் நடித்த இரண்டாவது தமிழ் படமான ‘பழனி‘, ‘பொம்மலாட்டம்‘க்கு முன்பாகவே திரைக்கு வந்தது. காஜல் அகர்வாலுக்கு சொந்த ஊர், மும்பை. தமிழ் பட படப்பிடிப்புகளுக்கு மும்பையில் இருந்து சென்னைக்கு பறந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். நடித்துக் கொடுத்துவிட்டு, மீண்டும் மும்பைக்கு பறந்து விடுவார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில், ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற படம் அடுத்து திரைக்கு வர இருக்கிறது. இந்தநிலையில், காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த கவுதம் கிட்லுவை திருமணம் செய்து கொண்டார். கவுதம் கிட்லு, உள் அலங்கார நிபுணர். வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் உள் அலங்காரம் செய்து கொடுப்பவர். திருமணத்துக்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து நடிக்க இருக்கிறார்.…

சிம்புவுக்கு நன்றி சொன்னார், ஹன்சிகா..

சிம்புவும், ஹன்சிகா மோத்வானியும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் இருவரும் மனம்விட்டுப் பேசி, பிரிந்து விட்டார்கள். என்றாலும் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். ஹன்சிகா நடித்து திரைக்கு வர இருக்கும் ‘மஹா’ அவர் நடித்துள்ள 50-வது படம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படம், இது. இதில், சிம்பு கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். ஹன்சிகா கேட்டுக்கொண்டதன் பேரில், சிம்பு இந்த படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. மஹா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், மஹா படத்தில் நடித்ததற்காக சிம்புவுக்கு ஹன்சிகா நன்றி தெரிவித்து இருக்கிறார். டைரக்டர் யு.ஆர்.ஜமீல், தயாரிப்பாளர்கள் மதியழகன், அப்துல் மாலிக், முகமது சுபைதார் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். “படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததில், மொத்த படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். வருகிற கோடை…

20இற்கு வாக்களித்தோர் மீது நடவடிக்கை எடுத்தல் அவசியம்

20ஆவது திருத்தத்திற்கு சார்பாக வாக்களித்த 08 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும், அந்தந்த கட்சிகள் மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு எதிராக ரவூப் ஹக்கீம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரே முன்னிலையாகி வாதாடினார். ஆனால் அவரின் கட்சி உறுப்பினர்கள் ’20’ இற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீமும், ரிஷாட்டும் நாடகமாடுகின்றனர் என்ற சந்தேகமும் எழும். அதுமட்டுமல்ல அவர்களின் கட்சிகளுடன் இணைந்து செயற்படமுடியாத நிலையும் ஏற்படும். 20 இற்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கின்றோம்.என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார். யாழில் (30) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு..

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக மேல் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு முதல் நாளை (02) காலை 05.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்கு நாளை 05 காலை முதல் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 05.00 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், குருணாகலை நகர சபை பிரிவு மற்றும் குளியாபிடிய பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 05 மணி முதல் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை…