புகழ் பெற்ற சகோதரர்கள் 2 நாள் இடைவெளியில் மரணம்

திரையுலகை சேர்ந்த புகழ் பெற்ற 2 சகோதரர்கள் 2 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர்.
திரையுலகில் பிரபலங்களாக மகேஷ் கனோடியா மற்றும் நரேஷ் கனோடியா சகோதரர்கள் இருந்து வந்தனர். அவர்களில் மகேஷ் கனோடியா முன்னாள் நாடாளுமன்றவாதியாவார். பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார்.
இதேபோன்று அவரது சகோதரர் நரேஷ் கனோடியா குஜராத்தில் பிரபல நடிகராக இருந்து வந்துள்ளார். குஜராத்தில் மில் தொழிலாளரின் குடும்பத்தில் பிறந்த இந்த சகோதரர்கள் திரை துறையில் குறிப்பிடத்தக்க அளவில் பிரபலம் அடைந்தனர்.
83 வயதுடைய மகேஷ் கனோடியா நீண்டகால உடல்நல பாதிப்புகளுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று அவர் காலமானார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர். அவரது சகோதரரான நரேஷ் கனோடியாவுக்கு (வயது 77) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதில் பலனின்றி அவர் இன்று காலை காலமானார். கனோடியா மறைவுக்கு பல்வேறு துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து 2 நாட்களில் திரையுலகை சேர்ந்த பிரபலங்களான 2 சகோதரர்கள் மரணம் அடைந்தது கலையுலகை சேர்ந்தவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Related posts