சிம்புவை வைத்து படம் அதுவும் ஐந்து மொழிகளில் நடக்கும் காரியமா..?

சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து இருக்கிறார். சிம்பு கழுத்தில் பாம்பை பிடித்து இருப்பதுபோன்று படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என்று டுவிட்டரில் சிம்பு அறிவித்துள்ளார். ஈஸ்வரன் படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக வருகிறார். பாரதிராஜா, நந்திதா, மனோஜ், பால சரவணன், முனிஸ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்திலும் சிம்பு நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பு தொடங்கி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். கன்னடத்தில் வெளியான முப்தி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். இதில் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

Related posts