ஜேம்ஸ் பாண்ட் ஸீன் கொனரி மரணமடைந்தார்.. 90 வயது.

பிரபல ஆங்கிலத்திரைப்பட நடிகர் ஜேம்ஸ் பாண்ட் புகழ் ஸீன் கொனரி தனது 90 வது வயதில் மரணமடைந்துள்ளதாக அவருடைய குடும்பத்தினர் பி.பீ.சிக்கு தெரிவித்துள்ளனர். ஸ்கொட்லாண்டை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு காலத்தில் கொலிவூட் திரையுலகையே கலங்க வைத்தவர். இவருடைய 007 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் தொடர்ச்சி உலக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மொத்தம் 40 திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் ஒன்று ஆஸ்கார் விருதையும் வென்றது. 1999 ம் ஆண்டு பெண்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உலகின் சிறந்த செக்ஸ் ஆண் என்று கணிக்கப்பட்டிருந்தார். ஸ்கொட்லாந்து எடின்பரோ நகரத்தில் 1930 ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் திகதி பிறந்தார். தனது 90 வது பிறந்த நாளையும் கொண்டாடி விடைபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை பார்க்காமலே விடை பெற்றுவிட்டார். அலைகள் 31.10.2020

நான் பிரமாதமான நடிகன் அல்ல என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தீபாவளி வெளியீடாக நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 'சூரரைப் போற்று' படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களை ஜூம் செயலி வழியாக சந்தித்துப் பேசினார் சூர்யா. அப்போது, " 'சூரரைப் போற்று' படத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால் எது" என்ற கேள்விக்கு சூர்யா கூறியதாவது: "இந்தப் படத்தில் மனைவியிடம் 12 ஆயிரம் ரூபாய் கடன் தர்றீயா என்று கேட்கும் அளவுக்கு உடைந்து போய் தரையோடு தரையாக இருப்பது மாதிரியான கேரக்டர். நான் ஒரு பிரமாதமான நடிகன் கிடையாது. என்னால் கேமரா முன்னால் உடனே நடிக்க முடியாது. ஒரு…

தனுஷுக்கு நாயகியாக ஒப்பந்தம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'அத்ரங்கி ரே', 'கர்ணன்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இந்தப் படங்களை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43-வது படமாகும். கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் படத்தின் 3 பாடல்களை உருவாக்கி முடித்துவிட்டது படக்குழு. இந்நிலையில், படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்தது. அதன்படி, தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ளனர். விஜய்க்கு நாயகியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து தனுஷுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த…

தொழில் அதிபரை மணந்தார் நடிகை காஜல் அகர்வால்

பிரபல நடிகை நடிகை காஜல் அகர்வால் திருமணம் மும்பையில் எளிமையாக நடந்தது. தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, பாயும் புலி, கோமாளி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் தொழில் அதிபர் கவுதம் கிட்சுலு என்பவருக்கும் திருமணம் முடிவானது. கவுதம் கட்டிடங்களில் உள் அலங்காரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. காஜல் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில் “நானும் கவுதமும் திருமணம் செய்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. கொரோனா தொற்று காலம் இந்த சந்தோஷமான தருணத்தை அளித்து இருக்கிறது. நாங்கள் வாழ்க்கையை ஒன்றாக தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியிருந்தார். இந்தநிலையில் காஜல் அகர்வாலுக்கும் கவுதமுக்கும்…

இந்தியாவின் பாதுகாப்புத் தேவைப் பட்டியலை ரஷியா பூர்த்தி செய்தது

ஜூன் மாதத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்தியாவின் பாதுகாப்புத் தேவைப் பட்டியலை ரஷியா பூர்த்தி செய்து உள்ளது. ஜூன் மாதத்தில் ஒப்படைக்கப்பட்ட தேவையை லேசான துப்பாக்கிகள், எறிபொருள்கள், குண்டுகள் ஆகியவை உள்ளடக்கிய இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் பட்டியல் தொடர்பான தேவைகளை ரஷியா பூர்த்தி செய்துள்ளது. இந்தியாவின் தேவையை செயல்படுத்த பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கின் ஜூன் மாத மாஸ்கோ பயணத்தின் போது பாதுகாப்புத் தேவை பட்டையல் ரஷியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ரஷியாவின் வெற்றியின் வெற்றி நாள் அணிவகுப்பு கொண்டாட்டத்திலும், நாஜி ஜெர்மனியின் சரணடைதல் நினைவு நாளிலும் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ரஷியா சென்றிருந்தார். மிக் 21 விமானம் ரஷியாவில் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 59 மிக் -29 விமானங்களை மேம்படுத்துதல் மற்றும் 12 சு -30 எம்.கே.ஐ விமானங்களை கொள்முதல் செய்வதோடு 21 மிக்…

நாட்டிற்கு பெரும் ஆபத்து வருவதற்கான வாய்ப்புள்ளது

மேல்மாகாணத்திலிருந்து ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வெளியேறியவர்களால் நாட்டிற்கு பெரும் ஆபத்து என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரிதா அல்துகே தெரிவித்துள்ளார். அவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்களையும் மருத்துவ சுகாதார அதிகாரிகளையும் ஈடுபடுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமைக்காக தனிமைப்படுத்தல் சட்டங்களின் கீழ் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு முன்னர் நான் கொட்டாவையில் பெருமளவு வாகனங்களை பார்த்தேன் என தெரிவித்துள்ள வைத்தியர் ஹரிதா அல்துகே மக்கள் தங்கள் பொறுப்புணர்வுகளை உணரவில்லை, தாங்கள் மற்றவர்களின் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதையும் இவர்கள் உணரவில்லை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தற்காலிக நடவடிக்கையாகவே மேல்மாகாணத்தில் ஊரடங்கு…

கொரோனா ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ்

தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு என்று வந்தது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும்…