நிலாவின் விரிவான புவியியல் வரைபடத்தை அமெரிக்கா வெளியிட்டது.

அப்பல்லோ புள்ளிவிவரத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் நிலாவின் விரிவான புவியியல் வரைபடத்தை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) வானியல் அறிவியல் மையம் (ஏ.எஸ்.சி) நாசா மற்றும் சந்திர மற்றும் கிரக நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நிலாவின் புவியியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

‘நிலாவின் ஒருங்கிணைந்த புவியியல் வரைபடம்’ என்று அழைக்கப்படும் புதிய வரைபடம் நிலாவின் மேற்பரப்பின் ஒரு வரைபடமாக செயல்படுகிறது, மேலும் இது எதிர்கால சந்திர பயணங்களை நோக்கி முன்னேறுவதற்கு முக்கியமானது. மேலும், இது விஞ்ஞான சமூகத்திற்கும், மற்றும் பிற கல்வியாளர்களுக்கும் ஒரு முக்கியமான கல்வி பாடமாகவும் செயல்படுகிறது.

இந்த வரைபடங்கள் ஏற்கனவே இருக்கும் அப்பல்லோ-கால வரைபடங்களின் ‘புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் உள்ளன. அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அப்பல்லோ சகாப்த வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்ட மற்றும் அதிக துல்லியமான படங்களுடன் ஒத்துப்போகாததால் காலாவதியானது என்று கூறி உள்ளது.

வானியியல் புவியியலாளர்கள் மற்றும் வரைபடவியலாளர்கள் வரைபடத்தை தயாரிக்கும் முயற்சியில் சமீபத்திய சந்திர பயணங்களின் தகவல்களைப் பயன்படுத்தினர். ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி,செலினாலஜிகல் அண்ட் இன்ஜினியரிங் எக்ஸ்ப்ளோரர் விவரங்கள் மற்றும் நாசாவின் சந்திர ஆர்பிட்டர் லேசர் ஆல்டிமீட்டர் விவரங்கள் வடக்கு மற்றும் தென் துருவங்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம்தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறி உள்ளது.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் ஆராய்ச்சியாளர்கள் புதிய மற்றும் பழைய விவரங்களை ஒன்றிணைத்து, சந்திரனின் ஸ்ட்ராடிகிராபி அல்லது பாறை அடுக்குகளைப் பற்றிய ஒருங்கிணைந்த விளக்கத்தையும் உருவாக்கினர். விஞ்ஞானிகள் ஆறு அப்பல்லோ-கால பிராந்திய வரைபடங்களையும், சமீபத்திய செயற்கைக்கோள் பயணங்களிலிருந்து சந்திரனுக்கான புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் பயன்படுத்தி உள்ளனர்.

புதிய வரைபடம் விண்வெளியில் நிலாவின் 440 கோடி ஆண்டுகள் பழமையான வரலாற்றை விளக்குகிறது.

Related posts