இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டிக்கவேண்டும்: அன்புமணி

இலங்கை கடற்படையினர் இந்தியக் கடல் எல்லையில் இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து இலங்கைத் தூதரை மத்திய அரசு அழைத்து கண்டனம் தெரிவிக்கவேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: “வங்கக் கடலில் கச்சத் தீவு அருகே இந்தியக் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு மீனவர் காயமடைந்துள்ளார். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத் தீவு அருகே இந்தியக் கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதை ஏற்க மறுத்த…

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் சேசு என்ற மீனவரின் கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். முன்னதாக, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். புதன்கிழமை நள்ளிரவு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்களை கடலில் கொட்டியும், வலைகளை வெட்டி எறிந்ததுடன் இலங்கை கடற்பகுதியில் மீண்டும் மீன்பிடிக்கக்கூடாது என எச்சரித்து விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனே விசைப்படகுகளை ராமேசுவரம் நோக்கி திருப்பினர். அப்போது கிங்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை நோக்கி இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்…

தடைகளை கடந்து சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு

2 வருட தடைகளை கடந்து மாநாடு படப்பிடிப்பு சென்னை தியாகராயநகரில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படம் பற்றிய அறிவிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெளியிட்டனர். ஆனால் படத்தில் நடிக்க சிம்பு காலதாமதம் செய்ததாக குற்றம்சாட்டி படத்தை கைவிடுவதாக பட நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து மாநாடு படத்துக்கு போட்டியாக மகா மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார் என்று அவரது தரப்பில் அறிவிப்பு வெளியானது. இந்த மோதலை தீர்க்க தயாரிப்பாளர் சங்கம் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது மாநாடு படத்தில் சிம்பு நடிக்க தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநாடு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டனர். டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், டேனியல், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர்…

தயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது புகார்

தயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது புகார் கூறப்படுகிறது. ரிஷி ரித்விக், ஆஷா ஜோடியாக நடித்துள்ள படம் மரிஜுவானா. எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். தேர்டு ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர்கள் பாக்யராஜ், மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே.ராஜன் கலந்து கொண்டு பேசும்போது, “கோடி கோடியாக சம்பளம் பெறும் நடிகைகளின் உதவியாளர்களுக்கு படி கொடுப்பதால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு ஆகிறது. வருமானத்தில் 10 சதவீதம் வரி கட்ட வேண்டும். மாநில அரசின் 8 சதவீத வரியை நீக்கும்படி கோரிக்கை வைக்க இருக்கிறோம். மரிஜுவானா படத்தின் கதாநாயகன் ரிஷி ரித்விக்கை பார்க்கும்போது தமிழ் படத்திற்கு அர்னால்டு கிடைத்துள்ளார் என்று…

இந்தியாவை திருத்தப் புறப்படும் இந்தியன் வெறும் ரிவீற் இந்தியன்

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து மூவர் மரணம் விபரமான செய்திகள்..! நுட்ட ஈடு வழங்குவது யார்..? ஒழுங்கான காப்புறுதி உண்டா..? இவர்கள் அனுமதி பெற்ற ஊழியரா..? சுரியான பாதுகாப்பு கடைப்பிடிக்கப்பட்டதா..? கருவிகள் பாவனைக்கு ஊர்ஜிதம் செய்யப்பட்டதா..? வெறும் அனுதாபங்களையும் ரிவிற் செய்வதையும் விட பாதிக்கப்பட்டவருக்கு ஒழுங்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன..? இந்தியாவில் படப்பிடிப்பில் சரியான ஒழுங்குகள் இருப்பதில்லை என்ற பாதுகாப்பு குறைபாடுகள் நிறையவே உள்ளன. இந்தியன் 2 ல் இந்தியாவை திருத்தப் புறப்படும் இந்தியன் நடைமுறையில் வெறும் ரிவீற் இந்தியன் என்பதை ரசிகர்கள் புரிவார்களா..? இனி இது குறித்த செய்திகள்.. ----------- கமல்ஹாசன் படப்பிடிப்பில் நேற்று ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு…

இந்தியா- பாகிஸ்தான் அணு போர் மூண்டால் 12.5 கோடி பலியாவார்கள்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் மூண்டால் 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் பலியாவார்கள் முனிச் பாதுகாப்பு அறிக்கை தெரிவித்து உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் 2025 இல் ஏற்படக்கூடும் என்றும் இதில் 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் கொல்லப்படக்கூடும் என்று முனிச் பாதுகாப்பு அறிக்கை 2020 கூறி உள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காஷ்மீரில் ஒரு தீவிரவாத தாக்குதல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும், மேலும் இரு அணுசக்தி நாடுகளுக்கிடையில் ஒரு முழு அளவிலான இராணுவ மோதலுக்கு கூட வழிவகுக்கும். இந்தியாவும், பாகிஸ்தானும் முறையே 100 மற்றும் 150 அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இரு நாடுகளும் 15 முதல் 100 கிலோ டன் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் இதன்…

வெளிநாட்டவரை விசாரிக்கும் விஷேட திட்டத்தில் பொலிஸ்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவரை விசாரிக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட திட்டத்தில் பொலிஸ் திணைக்களமும் நெருங்கிச் செயற்படுவதாக போக்குவரத்து பொலிஸின் தலைமையதிகாரியான, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நேற்று (19)கூறினார். பொலிஸ் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்: பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் நீர்கொழும்பில் உள்ள கத்தோலிக்க பாடசாலையொன்றை படம் பிடித்துவிட்டு நாட்டைவிட்டு 24மணி நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர். உரிய விசா இல்லாது அல்லது விசா முடிவுற்ற பின்னர் நாட்டில் தங்கியிருப்போர் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொலிஸாருடன் இணைந்து விசேட திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் பெரும்பாலும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய பிரஜைகள் தொடர்பாகவே இடம்பெறுகின்றன. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 216சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இத் தாக்குதல் இடம்பெற்று 10மாதங்கள் கடந்துவிட்டன.…

ஆகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தல்?

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய கட்சிகளை பதிவு செய்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிகளவில் அவதானத்தை செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 150 க்கும் அதிகமான புதிய கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. நிலவும் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்களை மாற்றுவது தொடர்பில் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. இத்தினங்களில் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.