நள்ளிரவில் நீதிபதி இடமாற்ற உத்தரவு கவனமாக இருக்க வேண்டும்!

நள்ளிரவில் நீதிபதிகளுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கும் போது, மத்திய அரசு சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்த கலவரத்தில் 42 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், " மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீஸாருக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் நீதிபதிகளைத் தேர்வு செய்யும், இடமாற்றம் செய்யும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு,…

பொருத்தமானவர் கிடைத்ததும் திருமணம் -கேத்ரின் தெரசா

பொருத்தமான மணமகனுக்காக காத்து இருக்கிறேன் என்று நடிகை கேத்ரின் தெரசா கூறியுள்ளார். தமிழில் மெட்ராஸ், கதக்களி, கடம்பன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கேத்ரின் தெரசா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “என்னை சந்திக்கிறவர்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். மணமகன் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன். பொருத்தமான மணமகனுக்காக காத்து இருக்கிறேன். திருமணத்துக்கு முன்கூட்டியே திட்டமிடுவது எனக்கு பிடிக்காது. எனது வீட்டிலும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். காதல் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அதே நேரம் காதலிக்க ஏற்ற மாதிரியான ஆணை எனது வாழ்க்கையில் இதுவரை சந்திக்கவில்லை. காதல் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அதை விளக்குவது கஷ்டம். நான் காதல் திருமணம் செய்து கொள்வேனா? அல்லது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேனா? என்பதை இப்போதே சொல்ல முடியாது.…

உடல் மெலிந்ததை விமர்சித்தவர்களுக்கு நடிகை சுருதிஹாசன் பதிலடி

உடல் மெலிந்ததை விமர்சித்தவர்களுக்கு நடிகை சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்துள்ளார். சுருதிஹாசன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டார். அதில் உடல் மெலிந்த தோற்றத்தில் ஆளே மாறிப்போய் இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் விமர்சித்தனர். உடல் இளைத்து அழகை கெடுத்து விட்டீர்களே நன்றாக சாப்பிட்டு எடையை கூட்டுங்கள் என்றனர். இன்னும் சிலர் சுருதியின் தோற்றத்தை கேலி செய்தனர். “கமல் சார் சுருதி மேடம் சாப்பிடாமல் இருக்கிறார். என்னவென்று கேளுங்கள்” என்றனர். ரசிகர்களின் இந்த கருத்துகளுக்கு சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து கூறியதாவது:- “குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக…

எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் – ரஜினிகாந்த்

எனக்கென்று தனியாக பாதுகாப்பு வேண்டாம் என நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் அதிகாரியிடம் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார். துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு ரஜினிகாந்த் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று சந்தித்து பாதுகாப்பு தொடர்பாக ஆலோசித்தார். அப்போது, தனக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற்றுக்கொள்ளும் படி ரஜினிகாந்த் கேட்டுகொண்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பையும் திரும்பப் பெற ரஜினிகாந்த் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து காவல் துறை இயக்குனரிடன் கலந்தாலோசித்து முடிவு செய்யவுள்ளதா காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ரஜினிகாந்திடம் கூறியதாக காவல்துறை தரப்பில் தகவல்…

முஹைதீன் யாசினை புதிய பிரதமராக மலேசியாவின் மன்னர் நியமித்தார்

மகாதீர் முகம்மது பதவி விலகியதை தொடர்ந்து முஹைதீன் யாசினை புதிய பிரதமராக மலேசியாவின் மன்னர் நியமித்துள்ளார். மலேசியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது (வயது 94) தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணிவைத்து தேர்தலை எதிர்கொண்டன. பக்காத்தான் ஹராப்பான் என்று அழைக்கப்படும் இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாதீர் முகமது பிரதமரானார். இதன் மூலம் அவர் உலகிலேயே அதிக வயதான பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். பொதுத் தேர்தலுக்கு முன்பு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியை வகிக்க போவதாகவும், நாட்டை மீ்ண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய பின்னர் அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சி…

ஆர்ப்பாட்டங்கள் என்னை மட்டுப்படுத்துகிறது ஜனாதிபதி

தேசிய கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்கும் திறமையான அரச சேவையை முன்னெடுப்பதற்கும் நேரத்தை செலவிட முடியாதவாறு ஆர்ப்பாட்டங்கள் தனது கவனத்தை மட்டுப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்தார். பாராளுமன்ற குழுக்கள் முன்வைத்திருக்கும் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த தான் விரும்பினாலும் தனது அலுவலகத்துக்கு முன்னால் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் தனது நேரத்தையும் கவனத்தையும் மட்டுப்படுத்துவதால் அந்த அறிக்கைகளை ஆராயமுடியாமல் இருப்பதாகவும் கூறினார். மிகச்சிறந்த செயற்பாட்டை அடைந்துள்ள அரசாங்க நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக அரசாங்க கணக்கியல் குழுவின் ஏற்பாட்டில் (கோபா) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து ஜனாதிபதி உரையாற்றுகையில், பல்வேறு அமைச்சுகளுக்கூடாக வரும் பிரச்சினைகளுக்கு அமைச்சு மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும். சுமார் 1.5 மில்லியன் அரசாங்க உத்தியோகத்தர்கள் எம்மிடம் உள்ளனர். இதற்கு மேலதிகமாகவும் பலர் அரசாங்க சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதனால் அரசாங்கத் துறையிலுள்ள…