அதிமுக நாடகம் அம்பலம் இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை இல்லை..!

தமிழீழம் என்று மாநில அரசால் நிறைவேற்ற முடியாத பிரேரணை கொண்டு வந்த ஜெயலலிதா பாணியளில் தற்போதய எடப்பாடி அதிமுக இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை என்று கடதாசி தீர்மானம் போட்டது தெரிந்ததே.

குடியுரிமை கொடு என்றால் கூட காரியமில்லை இரட்டை குடியுரிமை என்று தமிழக அரசு பிரித்து மேய்ந்தது, காரணம் நிலமை சூடு ஆறுவதற்காக என்று சிலர் கூறினர்.

இப்போது இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழருக்கு முதலில் குடியுரிமை இல்லை என்று மறுத்த இந்திய நடுவண் அரசு இப்போது இரட்டை குடியுரிமையுதம் இல்லை என்றுள்ளது.

இந்தியா எம் தாய்நாடு.. இந்திய கலாச்சாரம் எமது கலாச்சாரம்.. இந்திய இந்து மதம் எமது மதம் என்று நடந்த மக்களுக்கு இந்தியா கொடுத்துள்ள பதில் இது.

இலங்கையிலும் இல்லாமல் இந்தியாவிலும் இல்லாமல் திரிசங்கு சொர்க்க நிலையில் இவர்கள் நிலை மாறியுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு கூறி உள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த கோரிக்கை மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்து உள்ளதாக அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி வெளியிடபட்டு இருந்தது.

அதுபோல் இன்று பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணை மந்திரி நித்தியானந்தா ராய்

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என

Related posts