ஜனாதிபதி வேட்பாளராவார் கரு – லக்ஷமன் யாப்பா

ஜனநாயக தேசிய முன்னணி கைச்சாத்திடப்பட்டதுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய பதவி விலகி ஐக்கிய தேசிய கட்சின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்.எமது ஆருடம் தவறு என்று சபாநாயகரால் ஒருபோதும் மறுக்க முடியாது.

தனக்கு ஏற்றாட்போல் செயற்படுவார் என்பதற்காகவே பிரதமர் சபாநாயகரை ஆதரிக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ஒருபோதும் களமிறக்க மாட்டார். கட்சியின் தலைமைத்துவத்தினை எந்நிலையிலும் பிறிதொருவருக்கு விட்டுக் கொடுக்கவும் விட்டுக் கொடுக்கவும் மாட்டார். யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற போட்டித்தன்மையே ஐக்கிய தேசிய கட்சியினை பிளவுப்படுத்தும்.

Related posts