ராதாரவி என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லையே சாமி !

குடியுரிமைச் சட்டத்தை அன்று ஆதரித்துக் கையெழுத்திட்டவர்கள், இன்று எதிர்த்துக் கொடி பிடிக்கிறார்கள் என்று 'தமிழரசன்' இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசினார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தமிழரசன்'. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 29) நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் ராதாரவி பேசியதாவது: "இந்திப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை, தமிழ் பாட்டுக் கேட்க வைத்தவர் அண்ணன் இளையராஜா மட்டும் தான். அவரைப் பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனாலும்,…

மஞ்சு வாரியர் மீது விரோதம் இல்லை -நடிகர் திலீப்

மலையாள நடிகை மஞ்சுவாரியரும், நடிகர் திலீப்பும் விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சு வாரியர் மீது விரோதம் இல்லை நடிகர் திலீப் கூறினார். மலையாள நடிகை மஞ்சுவாரியரும், நடிகர் திலீப்பும் 1998-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார். மலையாள முன்னணி நடிகையை கூலிப்படையை ஏவி கடத்திய புகாரில் திலீப் கைதாகி 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வந்து இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு மஞ்சுவாரியர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இந்த நிலையில் மலையாள தொலைக்காட்சிக்கு திலீப் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “நடிகை கடத்தல் வழக்கில் முக்கியமான விவரங்களை விரைவில் வெளியிடுவேன்.…

ரஜினியை சந்தித்த குஷ்பு மகள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. குஷ்பு மகள் அனந்திதாவும் படப்பிடிப்புக்கு சென்று ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் வாங்கி உள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் 2 பெண்டாட்டிக்காரர் கதாபாத்திரத்தில் வருகிறார் என்றும், குஷ்புவும், மீனாவும் மனைவிகளாக நடிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது. குஷ்பு வில்லி வேடத்தில் நடிக்கிறார் என்று இன்னொரு தகவலும் வெளியானது. இவற்றை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேசுக்கு படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய புகைப்படம் வலைத்தளத்தில் பரவியது. இந்த நிலையில் குஷ்பு மகள் அனந்திதாவும் படப்பிடிப்புக்கு சென்று ரஜினியை சந்தித்து…