காஷ்மீர் மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுங்கள்

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும், இந்திய அரசை கண்டித்தும் ஒரு மணி நேரம் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த பாகிஸ்தான் மக்களுக்கு, பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு செய்து, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப்பெற்றது. மாநிலத்தை இரு பிரிவுகளாகப் பிரித்து, லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த பாகிஸ்தான் அரசு, இந்தியாவுடனான வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. மேலும், இந்தியாவின் செயல் குறித்து சர்வதேச சமூகத்திடம் பாகிஸ்தான் அரசு முறையிட்டபோதும், எதிர்பார்த்த ஆதரவு உலக நாடுகளிடம் இருந்து கிடைக்கவி்ல்லை. வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை…

சம்பளம் தராமல் ஏமாற்றுகின்றனர் தயாரிப்பாளர்கள்

அசுரன் போன்ற ஒரு படத்தில் நடிக்க 36 வயதில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். தனுஷ்-மஞ்சுவாரியர் நடித்துள்ள படம் அசுரன். வெற்றி மாறன் இயக்கி உள்ளார். எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தனுஷ் கலந்து கொண்டு பேசியதாவது:- “அசுரன் போன்ற ஒரு படத்தில் நடிக்க 36 வயதில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். மஞ்சுவாரியர் திறமையான நடிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இதில் நிறைவேறி உள்ளது. வடசென்னையை விட அசுரன்தான் வெற்றிமாறனின் சிறந்த படமாக இருக்கும். வட சென்னை படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்று ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். நான் விருது கிடைத்ததும்…

விஜய்யை வைத்து மீண்டும் படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி

விஜய் நடித்த ‘செந்தூர பாண்டி,’ ‘ரசிகன்,’ ‘தேவா’ ஆகிய மூன்று படங்களை தயாரித்தவர், எஸ்.சேவியர் பிரிட்டோ. இவர், விஜய்யின் நெருங்கிய உறவினர் ஆவார். விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். சில வருட இடைவெளிக்குப்பின் இவர், மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இதுபற்றி அவர் சொல்கிறார்:- “நீண்ட காலத்துக்குப்பின், விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதில், மகிழ்ச்சி. அவரை வைத்து ஏற்கனவே 3 படங்களை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ‘பிகில்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறோம் என்பதை அனைவருக்கும் அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்., இது, அவர் நடிக்கும் 64-வது படம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கியவர். அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம்…

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏழை மக்களின் நலனுக்காக

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில் தீபா மற்றும் தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் புகழேந்தி, ஜனார்த்தனன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்த 27 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் இருவரும் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையின் போது ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் ஆகஸ்டு 30-ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து தீபா, தீபக் இருவரும் சென்னை…

அடிபட்ட கன்று ; பாசப் போராட்டம் நடத்திய தாய்..!

முச்சக்கர வண்டி மோதியதில் அடிபட்டு உயிருக்கு போராடிய தனது கன்றுக் குட்டியைப் பார்த்து பதறிய தாய்ப் பசு, கன்றை நாக்கினால் தடவி பாசப் போராட்டம் நடத்தியக் காட்சி கண்டோரின் கண்களில் நீரை வரவழைத்தது. தமிழகத்தின் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகருக்கு ஒரு முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்தது. காஜாமலை காலனி அருகே அந்த முச்சக்கர வண்டி சென்றபோது, ஓடிவந்த கன்றுக் குட்டி அதன் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், முச்சக்கர சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. முச்சக்கர வண்டி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கன்றுக் குட்டி, படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து முச்சக்கர வண்டியை தூக்கி நிறுத்திவிட்டு கன்றுக் குட்டியை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் அங்கு சில பசுக்களுடன் ஓடிவந்த கன்றின் தாய், அடிபட்டு வலியால்…

காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. அறிக்கை!

வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்களைப் பொறுத்தவரை இலங்கை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அத்துடன் காணாமல்போனோர் அலுவலகம் மாபெரும் பொறுப்பு ஒன்றைக் கொண்டிருக்கிறது. அவ்வலுவலகத்தின் சவால்மிக்க ஆணையை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். நீண்டகால நோக்கிலான நிலைபேறான முயற்சிகளின் ஊடாகவே துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கான தீர்வையும், மீட்சியையும் அளிக்க முடியும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியிருக்கிறது. சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள்சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.