ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான கலந்துரையாடல் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தற்போது இடம்பெறுகின்றது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு விஜேராம பகுதியில் எதிர்க்கட்சி தலைவரிக் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.

————

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள பல்வேறு தீர்மானங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருப்தியடைய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறாயினும் பொது மக்கள் சார்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சரியான தீர்மானங்கள் தொடர்பாக தமது ஒத்துழைப்பினை வழங்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எந்நேரமும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது நாட்டினுள் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் உரிமை ஜனாதிபதிக்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கும் மாத்திரமே உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை. அவருக்கு எதிர்க்கட்சியின் கடமைகளை மாத்திரமே நிறைவேற்ற முடியும். நாட்டிலே தேசிய ரீதியில் முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தினுள் பிரேரணைகளை முன்வைத்தல் கருத்துத் தெரிவித்தல் மற்றும் அதற்கு வெளியே பொது மக்களை விழிப்பூட்டல் உள்ளிட்ட பணிகளை அவரால் மேற்கொள்ள முடியும்.

தற்போது மக்கள் மத்தியில் நிலவுகின்ற அமைதியற்ற நிலை சந்தேகம் மற்றும் அச்சம் என்பவற்றினை அகற்றுவதற்காக அன்னார் ஏற்கனவே ஊடகச் செய்திகள் மற்றும் வாய்மூல விளக்கமளித்தல்கள் என்பவற்றின் ஊடாக பொது மக்களை விழிப்பூட்டியுள்ளார் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

————

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றிரவு 7.00 மணி முதல் நாளை (16) அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.

————–

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்ட குழுக்கள் முன்னெடுத்த தொடர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல், நிக்கவரட்டிய, சிலாபம், புத்தளம் மற்றும் குளியாபிட்டிய ஆகிய பொலிஸ் வலயங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் அவ்வந்த நீதிமன்றங்களில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts