ஜெனீவாவில் என்ன நடக்கிறது.. கழுதையின் முன் தொங்கும் கரட்

மனித உரிமைகள் கழகத்தில் பிரிட்டன் ஆடும் நாடகம் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற கோணத்திலேயே இருக்கும்..

சிறீலங்கா அரசாங்கத்தை தண்டிக்காமல் தட்டிதட்டி மெல்ல நகர வைத்து, ஏதோ களிமண் பிடிக்க வருவதை கண்டு கொள்ளுமளவுக்கு தமிழ் மக்களை களைப்படைய செய்துவிடுவதாகவே இருக்கும்.

சிறீலங்கா அரசுக்கு போரை நடத்த 30 வருடங்கள் நிதி வழங்கி களைத்து பின் தாமே இறங்கிய மேலை நாடுகளுக்கு அங்கு அமைதியும் தாம் இறங்காமல் வராது என்பது தெரியும்.

ஆனால் அவர்களுக்கு இப்போது இலங்கையில் இலாபம் இல்லை.. ஆகவே ஆளாளுக்கு புசத்துவதே நடக்கும் என்பதே யதார்த்தம்..

தமிழ் படமொன்றில் பாடசாலையில் கொல்லப்பட்ட பிள்ளையை தேடி வரும் பெற்றோரை அங்கு இங்கு என்று அலைத்து கடைசியில் களைப்படைய வைத்து குற்றவாளியை தண்டிப்பதைவிட பிரேதத்தை தந்தாலே போதும் என்றளவுக்கு கொண்டு வருவதாக காட்டுவார்கள்.

அதுதான் ஜெனீவாவில் நடக்கிறதா என்பது ஓர் ஒப்பீட்டு கேள்வி..

இது குறித்து வெளியான இன்றைய செய்திகள்..

———————–
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

புதிய பிரேரணையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கப்போவதில்லை. இதனால் ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையில் உள்ளதைப்போன்று மாற்று வழிமுறைகள் கையாளப்பட வேண்டும். சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்று அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இது குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா வந்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளான ரவிக்குமார் (பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் ), மாணிக்கவாசகர் (நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்), திருச்சோதி (அனைத்துலக ஈழத்தமிழர் பேரவையின் தலைவர்) ஆகியோரே இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

———–

அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத
கருணாஸ்கூட போயுள்ளது வேடிக்கை..:

சர்வதேச விசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்காக தீர்வாக அமையும். இலங்கைக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்டோரின் துயரம் குறித்தும், ஏனைய சர்வதேச மனித உரிமை, மனித நேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் இலங்கைக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்ற உறுப்பினர் சே. கருணாஸ் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை விவகாரம் குறித்த விசேட உபகுழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

————–

வழமைபோல சிறீதரன் வாண வேடிக்கை :

இலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று ஜெனிவாவில் தெரிவித்தார்.

ஜெனிவா வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிடப்போகின்றன. வடக்கு கிழக்கு மக்கள் எந்த விதமான ஆரோக்கியமான நடவடிக்ககைளையும் இன்னும் அரசாங்கத்தரப்பிலிருந்து காணவில்லை.

இந் நிலையில் இலங்கையில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லையென ஐ.நா. மனித உரிமை பேரவையின் மூன்று ஆணையாளர்கள் தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்றபோதிலும் ஒவ்வொரு முறையும் இலங்கைக்கு இரண்டு வருட காலத்தை மனித உரிமை பேரவை ஏன் வழங்கிக்கொண்டிருக்கிறது எனவும் இதன்போது அவர் கேள்வி எழுப்பினார்.

Related posts