முக்கியத்துவம் வாய்ந்த 10 தமிழக தொகுதிகள்

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தொகுதியில் வெல்வதும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் முக்கியம். எனினும், போட்டியிடும் வேட்பாளர்கள், அந்தத் தொகுதியில் நிலவும் பிரச்சனைகள், அந்தப் பிரச்சனைகள் அந்தந்தத் தொகுதியில் மட்டுமல்லாது பிற தொகுதிகளின் தேர்தல் முடிவுகளிலும் தாக்கம் செலுத்தவுள்ள வாய்ப்பு போன்ற காரணிகள் பிற தொகுதிகளைவிட அந்தத் தொகுதிகளுக்கு சற்றே கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்து விடுகின்றன. அப்படிப்பட்ட 10 தமிழக மக்களவைத் தொகுதிகள் பற்றிப் பார்ப்போம். 1. மத்திய சென்னை சென்னை மாநாகரில் மூன்று மக்களவைத் தொகுதிகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்பட்டாலும், எந்த ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினைரை மட்டுமல்லாது, பொருளாதாரத்தின் அனைத்து அடுக்குகளையும் சேர்ந்த வாக்காளர்களையும் பெரும்பான்மையாக கொண்டிராமல் கலவையான தொகுதியாக இருக்கிறது மத்திய சென்னை. சராசரி சென்னை வாக்காளர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் தொகுதியாக இந்தத் தொகுதி உள்ளது. 2. பொள்ளாச்சி பொள்ளாச்சியில் சமீபத்தில் அதிர்வலைகளை உண்டாக்கிய…

பாவம் விஜயகாந்திற்கு ஓய்வு கொடுங்கள்.. ஆனந்தராஜ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். எனவே இப்போதைய சூழ்நிலையில் அவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் அவரது குடும்பத்தாரை கேட்டுக்கொள்கிறேன்’’ என்று நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்தார். நடிகர் ஆனந்த்ராஜ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ’’கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தனித்து நின்றார். வென்றார். ஆனால் இந்த முறை அதிமுகவுக்கு இருக்கிற வாக்குவங்கியை, பாஜகவுக்கும் பாமகவுக்கும் மற்ற கட்சிகளுக்கு இப்போது உள்ள அதிமுகவின் தலைமை, தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது. இது வேதனைக்குரிய ஒன்று. கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா என்னை அழைத்து பிரச்சாரம் செய்யச் சொன்னார். 50 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தேன். ஆனால் இந்த முறை, அதிமுக தலைமை வேறுவிதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பிரதமர் மோடியிடமும் திமுக மற்றும்…

இனி பிரபல பாடசாலைகள் என்ற பேச்சே இருத்தல் கூடாது மைத்திரி

நகர்ப்புற பாடசாலைகளுக்கு மாத்திரம் வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதனால் ஏற்பட்டுள்ள பிரபல பாடசாலைகள் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பேதமின்றி வளங்களை பெற்றுக்கொடுத்து அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி உரிமையை வழங்குவதற்காகவே ”அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பொலன்னறுவை ஹதரஎல சீவலி முன்மாதிரி கனிஷ்ட பாடசாலையின் 03 மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (29) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாடசாலையின் ஆசிரியர் விடுதியையும் கலையரங்கத்தையும் இதன்போது ஜனாதிபதி திறந்து வைத்தார். இன்று முற்பகல் கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து 03 மாடி…

915 இலங்கை வெளிநாட்டவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படுமென்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர், வெளிநாடுகளில் மாறுபட்ட அனுபவங்களைக் கொண்டுள்ள நபர்களுக்கு மீண்டும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பம் இந்த வேலைத்திட்டத்தன் மூலம் கிட்டுவதாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, அவுஸ்திரேலியா, சுவீடன், நியுசிலாந்து, டென்மார்க், சுவிற்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தன இரட்டைப் பிரஜாவுரிமைச் சான்றிதழை வழங்கினார்.

விஜய் படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார்..

விஜய் ‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல் படங்கள் வந்தன. விஜய் ‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல் படங்கள் வந்தன. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லனாக கதிர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதை கசிந்து விட்டதாகவும் சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யும், கதிரும் கால்பந்தாட்ட வீரர்கள். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்குகின்றனர். ஒரு கட்டத்தில் கதிர் மர்மமாக கொல்லப்படுகிறார். கொலையாளிகளை கண்டுபிடிக்க விஜய் களம் இறங்குகிறார். அப்போது கொலைக்கு பின்னணியில் பெரிய சதி இருப்பது தெரிகிறது. வில்லன்களுடன் மோதி அழித்துவிட்டு கதிர் பயிற்சி அளித்த பெண்கள் கால்பந்து அணிக்கு…

ரஜினி படத்தில் நகயன்தாரா நாயகி முருகதாஸ் இயக்கம்

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியானது. அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போவதால் மீண்டும் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்களை எடுத்து தமிழ் பட உலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் கதையை 5 மாதங்களுக்கு முன்பே ரஜினியிடம் சொல்லி ஒப்புதல் பெற்ற முருகதாஸ் திரைக்கதையில் பரபரப்பை ஏற்றி திருப்பங்களுடன் மேலும் மெருகூட்டி வந்தார். அந்த பணிகள் தற்போது முடிவடைந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி மும்பையில் படப்பிடிப்பை தொடங்க தயாராகி உள்ளனர். இது அரசியல் படம் என்றும், நாற்காலி என்று பெயர் வைத்துள்ளனர் என்றும் இணையதளங்களில் தகவல் பரவியது. ஆனால் முருகதாஸ் தரப்பில் இதனை மறுத்தனர். ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அரசியல் சமூக விஷயங்கள்…

‘சூப்பர் டீலக்ஸ்’ என்னவோ தளர்ச்சி இருக்கிறது

சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பாராட்ட நிறைய இருந்தாலும், என்னவோ தளர்ச்சி இருக்கிறது என இயக்குநர் ராசி அழகப்பன் தெரிவித்துள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நேற்று (மார்ச் 29) வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. படத்தைக் கொண்டாடும் அதேசமயத்தில், சிலர் எதிர்மறை விமர்சனங்களையும் வைக்கின்றனர். ‘வண்ணத்துப்பூச்சி’, ‘குகன்’ ஆகிய படங்களை இயக்கிய ராசி அழகப்பன், ‘சூப்பர் டீலக்ஸ்’ குறித்துத் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார். “ ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்தேன். முதலில் பாராட்டு. புதிய முயற்சிகளோடு, புதிய கண்ணோட்டத்தோடு எடுக்கப்படும் படத்திற்கு. ஆனால், அதுவே போதும் என்று நினைத்துவிட்டால், இல்லை என்றுதான் நான் சொல்வேன்.…

டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன

குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக இது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் பிஎன்ஏஎஸ் என்னும் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு டக்கோட்டா மாகாணத்திலுள்ள டேனிஸ் என்ற பகுதியில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குறுங்கோள் தாக்கிய பின்னர் சுமார் சில நிமிடங்கள் முதல் ஒருசில மணிநேரங்களில் அப்பகுதியில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் குறித்த புரிதல்களை இந்த புதைபடிமங்கள் வழங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அந்த குறுங்கோள்…