7 லெவன் விற்பனையகம்: இந்தியாவில்

அமெரிக்காவில் பிரபல சங்கிலித் தொடர் நிறுவனமான 7 லெவன் விற்பனையகத்தை இந்த ஆண்டு இந்தியாவில் தொடங்க பியூச்சர் குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆசிய நாடுகளில் 7 லெவன் விற்பனையகம் தொடங்க ஒப்பந் தம் செய்யப்பட்டுள்ளது.

பியூச்சர் குழுமம் பிக் பஜார், ஃபுட் ஹால், நீல்கிரிஸ் உள்ளிட்ட சங்கிலித் தொடர் விற்பனையகங்களை நடத்தி வருகிறது. இக்குழுமம் அமெரிக்கா வில் பிரபலமாக உள்ள சங்கிலித் தொடர் நிறுவனமான 7 லெவன் விற்பனையகத்தை இந்தியா வில் தொடங்க முடிவு செய்துள் ளது.

கிஷோர் பியானிக்கு சொந்த மான பியூச்சர் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் அந்நிறுவன பங்குகள் 3.2 சதவீதம் ஏற்றம் பெற்றன. இக்குழுமம் இந்தியா முழுவதும் 1,444 விற்பனை யகங்களை நிர்வகிக்கிறது.

அமெரிக்க நிறுவனத்தைத் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தம் மூலம் கூடுதல் வரு மானம் கிடைக்கும் என்று எடெல் வைஸ் நிறுவனத்தின் நிதி சேவை பிரிவு துணைத் தலைவர் அப்னீஷ் ராய் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் சர்வதேச அளவில் மிகவும் பிரபல மான சங்கிலித் தொடர் நிறுவனம் உருவாக வழியேற்பட்டுள்ளது என்றார்.

7 லெவன் விற்பனையகம் குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள், துரித உணவுகள் உள்ளிட் டவற்றை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்துக்கு 17 நாடு களில் மொத்தம் 67 ஆயிரம் விற் பனையகங்கள் உள்ளன. இந்த விற்பனையகங்கள் 24 மணி நேரமும் செயல்படுபவையாகும்.

இந்தியாவில் சில மாநில அரசு கள் 24 மணி நேரமும் விற்பனையகம் செயல்பட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோல 24 மணி நேரமும் மதுபானங்களை விற்க சில மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் இரவு 10.30 மணிக்கு மேல் செயல்பட அனுமதிப்பதில்லை. இந்த பிரச்சினை மட்டும்தான் 7 லெவன் விற்பனையகம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை என்று டிலோய்ட் நிறுவன ஆலோ சகர் அனில் தல்ரேஜா குறிப்பிட் டுள்ளார்.

Related posts