சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’

சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சிம்பு ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், கேத்ரின் தெரேசா மற்றும் மேகா ஆகாஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுமன், மஹத், ரோபோ சங்கர், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அத்தரண்டிகி தாரேதி’ படத்தின் ரீமேக் இது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் முதலில் ‘பொங்கல் வெளியீடு’ என அறிவிக்கப்பட்டது. ஆனால், அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ரஜினியின் ‘பேட்ட’ படங்கள் ரிலீஸானதால், இந்தப் படத்துக்குப் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி படம் ரிலீஸாகவில்லை.

இதனால், படம் எப்போது ரிலீஸாகும் என சிம்பு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். பிப்ரவரி முதல் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்ததால், சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

இந்நிலையில், படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால், சிம்பு ரசிகர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.

Related posts