சினிமா நடிகரை மணக்க மாட்டேன் : காஜல் அகர்வால்

சினிமாவில் ஜோடியாக நடிக்கும் ஒரு சில நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்கின் றனர். மேலும் சில ஜோடிகள் காதல் வலையில் விழுந்து எப்போது திருமணம் செய்துகொள்வது என்ற திட்டமிடலில் உள்ளனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது கடும் ஆட்சேபனையை எழுப்பி உள்ளது. அவர் கூறும்போது, ‘திரைத் துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து. எனது வாழ்க்கைக்கு பொருத்தமான, என் மனத்துக்கு பிடித்தமானவரை நான் மணப்பேன்’ என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், சினிமா நடிகரையோ அல்லது சினிமா துறை சம்பந்தப்பட்ட வரையோ மணக்க மாட்டார் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காஜல். சில நடிகைகள் நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகின்றனர். காஜலை பொறுத்த வரை அதுபோன்ற கிசுகிசுக்களில் அதிகம் சிக்கியதில்லை. நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர் தனது…

போருக்கு பிந்தைய வாழ்க்கை படம்

போருக்கு பிந்தைய வாழ்க்கை கதையாக உருவாகிறது ஒற்றை பனைமரம். மண் என்ற படத்தை இயக்கிய ராசையா இயக்குகிறார். எஸ்.தணிகைவேல் தயாரிக்கிறார். புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா, பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் நடித்துள்ளனர். படம் பற்றி எஸ்.தணிகைவேல் கூறும்போது,’போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் இப்படம் சமகால சூழலில் முன்னாள் போராளிகளுக்கும், மக்களுக்கும் இடையேயான கதையாக துணிச்சலுடன் சொல்லியிருக்கிறோம். யதார்த்தமான நடிப்பு இயல்பான காட்சிகள் ஈழத்தில் கிளிநொச்சியில் உள்ள கிராமத்துக்கு அழைத்து சென்றுவிடும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். உண்மை சம்பவங்கள் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு இசை அமைத்திருக்கும் அஷ்வமித்ரா தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை பயன்படுத்தியிருக்கிறார். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு. 37 சர்வதேச விருதுகளுக்கு தேர்வாகி பல விருதுகள் பெற்றிருக்கிறது’ என்றார்.

ஜெ.,-வின் போயஸ் கார்டன் வீடு முடக்கம் : ரூ.17 கோடி வரிபாக்கி

வருமானவரி மற்றும் செல்வ வரி ரூ.16.75 கோடியை செலுத்தாமல் பாக்கி வைத்த காரணத்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு, ஐதராபாத் வீடு, பார்சன் காம்ப்ளக்ஸ் பிளாட், மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள சொத்து ஆகியவற்றை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இந்த தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த துறை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், போயஸ் கார்டன் பகுதி மக்கள் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து சமூக…

வேள்ட் எக்கனனோமிக் போரும் சுவிற்சலாந்து நாட்டில் நடக்கிறது ( காணொளி )

உலகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த அதிருப்தியும், 2019 ம் ஆண்டு உலகப் பொருளாதாரமும்.. ( காணொளி ) அலைகள் 24.01.2019

திசைகள் இளையோர் அமைப்பினால் நாடாத்தப்பட்ட சித்திரப்போட்டி

திசைகள் இளையோர் அமைப்பினால் நாடாத்தப்பட்ட சித்திரப்போட்டியின் வெற்றியாளர்கள்: 2018 04-11-2018 அன்று டென்மார்க்கில் 8வது முறையாக சித்திரப்போட்டி நடைபெற்றது. இப்போட்டி தமிழீழ விடுதலைப்போரில் தம் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களை நினைவுகொள்வதற்காக வருடாவருடம் நடைபெறுகின்றது. இந்த வருடமும் மாணவர்கள் பல அழகான சித்திரங்களையும் கருத்துக்களையும் தாயாரித்துள்ளனர். அதிகமான மாணவர்களின் பங்களிப்பை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். பங்குபற்றிய மாணவர்கள் வயதின்படி 4 குழுகளாக பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வோரு குழுவிற்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது. குழு A - படங்களுக்கு வண்ணம்தீட்டுதல் குழு B - பூஞ்சோலை குழு C - கனவு இல்லம் குழு D - என் அடையாளம் குழு E - எதிர்காலத்தில் தமிழீழம் நடுவர்கள் மதிப்பிட்ட சித்திரங்களையும் வெற்றியாளர்களையும் உங்கள் முன் அறிவிப்பதில் மகிழ்வடைகின்றோம். குழு A வெற்றியாளர்கள்: இலக்கியா ஞானசேகர் - கொல்ஸ்ரப்ரோ…

இ.எம். ஃபார்ஸ்டர் அற்புதமான எழுத்தாளர்

1879-ம் ஆண்டு முதல் 1970 வரை வாழ்ந்த இ. எம். ஃபார்ஸ்டர் ஆங்கில நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை ஆசிரியர் ஆவார். மேலும், இவர் இலக்கிய மற்றும் சமூக விமர்சகராகவும் விளங்கியுள்ளார். இவரது பெரும்பாலான நாவல்கள் வகுப்புவாத வேறுபாடு மற்றும் போலித்தனம் பற்றி எழுதப்பட்டவை. பதினாறு வெவ்வேறு ஆண்டுகளில் இவரது பெயர் இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது. இவரது எழுத்துகளை தழுவி பல்வேறு திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. தனது மிகச்சிறந்த படைப்புகளின் மூலமாக அவரது காலத்தின் மிக அற்புதமான எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். # நமக்காகக் காத்திருக்கும் வாழ்க்கையை வாழ்வதற்கு, நாம் திட்டமிட்டுள்ள வாழ்க்கையை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். # பிறப்பு, உணவு, தூக்கம், அன்பு மற்றும் இறப்பு ஆகிய ஐந்துமே மனித வாழ்வின் முக்கிய உண்மைகளாகும். # உண்மையில் நாம் தனிப்பட்ட முறையில் தெரிந்தவற்றை…

பிப்.11-ம் தேதி செளந்தர்யா – விசாகன் திருமணம்

பிப்ரவரி 11-ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம் சென்னையில் நடைபெறவுள்ளது. ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், ‘கோச் சடையான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவருக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக் கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அஸ்வின் - செளந்தர்யா இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். இருவருக்கும் அதிகாரப்பூர்வமாக விவகாரத்தும் ஆனது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்பாக செளந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியானது. விசாகன் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன். இவர் அமெரிக்காவில் படித்தவர். 'வஞ்சகர் உலகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரும்…

சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’

சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சிம்பு ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், கேத்ரின் தெரேசா மற்றும் மேகா ஆகாஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுமன், மஹத், ரோபோ சங்கர், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அத்தரண்டிகி தாரேதி’ படத்தின் ரீமேக் இது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படம் முதலில் ‘பொங்கல் வெளியீடு’ என அறிவிக்கப்பட்டது. ஆனால், அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ரஜினியின் ‘பேட்ட’ படங்கள் ரிலீஸானதால், இந்தப் படத்துக்குப் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி படம் ரிலீஸாகவில்லை. இதனால்,…

23 சிறுவர்கள் உள்ளிட்ட 277 பேரின் மனித உடல் மீதங்கள்

இலங்கை மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித மனித உடலுறுப்பு மீதங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக இன்று வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த மாதிரிகள் அடங்கிய பொதி, மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழங்கப்பட்டது. இதுவரை மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின் மூலம் 23 சிறுவர்கள் உள்ளிட்ட 277 பேரின் மனித உடல் மீதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட மனித உடல் மீதங்கள், மன்னார் நீதிவானின் நேரடி கண்காணிப்பில் தெரிவு செய்யப்பட்டு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்துக்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட மனித மீதங்கள் ஒரு சிறிய பெட்டியில் மிகவும் பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்பட்ட நிலையில்…