பெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்

டென்மார்க்கில் உள்ள அரச கிறீஸ்தவ மதமான போல்க கியக்க பிரிவில் பெண் பாதிரியார்கள் ஆண் பாதிரியார்களால் அவமதிக்கப்படுகிறார்கள் என்று யூலன்ட் போஸ்டன் எழுதியுள்ளது.

எதற்காக அவமதிக்க வேண்டும்..?

பெண்கள் என்பதற்காக அவமதிக்கிறார்கள் என்கிறார்கள். தேவாலயங்களில் பெண்களை மரியாதை கொடுத்து நடத்துவதில்லை. உதாரணமாக 11 பெண் பாதிரியார்கள் இது தொடர்பான பேட்டியை வழங்கியபோது தாம் பெண்கள் என்ற காரணத்தால் ஆண் பாதிரியார்கள் கை குலுக்க மறுத்தனர் என்று கூறுகிறார்கள்.

இப்படி பெண்கள் என்ற காரணத்தினால் பாகுபாடு காட்டுவது சரியானதல்ல, இது பைபிள் காட்டும் நெறியல்ல என்ற அதிருப்தி ஆய்வில் இருந்து பூதம் போல கிளம்பியுள்ளது.

டென்மார்க்கின் தேவாலய பிரிவு மிகவும் பெரியது… பாதிரியார்கள் என்றால் கடவுள் அல்ல அவர்களும் ஆசாபாசம் கொண்ட சாதாரண மனிதர்களே.. ஆகவே இப்படியான தவறுகளை கண்டறிவதும் கட்டுப்படுத்துவதும் கடினம் என்கிறார் ஒரு விரிவுரையாளர்.

இவை தொடர்பாக சட்ட ரீதியான ஒழுக்காற்று விதிகள் இருந்தாலும் அவை போதியவையல்ல என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் முடிவு நமது உள்ளத்தில் சில கேள்விகளை ஏற்படுத்தத் தவறவில்லை.

இப்போது பாதிரியார்களின் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய செய்திகள் பரவுவதால் எதற்கு வம்பென்று தவிர்க்கிறார்களா..?

மீ ரூ அமைப்பு நம்ம வைரமுத்துவை மாட்டியதைப் போல இவர்களையும் மாட்டிவிடும் என்று பயப்படுகிறார்களா..?

மேலும் யாராவது கை கொடுத்தால் கை கொடுத்தவரின் கை அழுக்காக இருக்கும் என்று கருதி சில பெண்கள் பின்னர் தமது கையை மறைவாக உடையில் தேய்ப்பது, கிருமி நாசினி மருந்தை தடவுவது போன்ற காட்சிகளை இப்போது பரவலாக காண முடிகிறது.

இது போல கசப்பான அனுபவங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்ற கோணத்திலும் நோக்க வேண்டும். பெண்களை நிராகரிக்கும் போக்கு ஒருவர் அல்ல பொதுவாக பலரிடம் உள்ளது என்றால் மாறாக பெண்களில் உள்ள குறைபாடுகளும் பார்க்கப்பட வேண்டுமன்றோ..?

மேலும் பெண் பாதிரியார்கள் பைபிளை சரியாக சொல்வதில்லை என்ற வெறுப்பிருக்கிறதா..?

இல்லை பெண் பாதிரியார்களை போல ஆண் பாதிரியார் கருத்துக்களை மக்கள் கவனமாக கேட்பதில்லை என்பதால் வந்த வெறுப்பா..?

இப்படி ஆயிரம் கேள்விகள் உள்ளன.

ஆகவே மொட்டையாக ஆய்வு செய்து போக முடியாது..

ஒருவர் கை நீட்ட, மற்றவர் வணக்கம் என்று கும்பிட்டால் அது துவேஷமா இல்லையா? என்பதையும் தமிழர்கள் பேச வேண்டியது அவசிம் என்றால் அது தவறோ..?

அலைகள் 20.01.2019 ஞாயிறு

Related posts