சர்க்கரை வியாதி இரண்டா கவனம் உங்கள் பற்கள் புதிய ஆய்வு

ஒருவருக்கு சர்க்கரை வியாதி 2 இருந்தால் அந்த வியாதி இல்லாத ஒருவருடைய பற்களுடன் ஒப்பிட்டால் சர்க்கரை வியாதி இரண்டு உள்ளவர்களின் பற்கள் பழுதடையும் வேகம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக இன்றைய காலைச் செய்தி கூறுகிறது.

இது தொடர்பாக சர்க்கரைவியாதி கண்ட 250.000 பேர்களிடம் எடுத்த ஆய்வில் இந்த இந்த உண்மை கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே உங்களுக்கும் சர்க்கரை வியாதி இலக்கம் இரண்டா..? வரும் நாட்களில் பல் வைத்தியர் கட்டணம் உயர்ந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள் என்பது இந்த ஆய்வுதரும் முன்னெச்சரிக்கை அம்ம.

அது சரி இந்த நேரம் பார்த்து இந்த ஆய்வு வெளிவர காரணமென்ன..? என்று நமது மண்டைக்குள் ஒரு குருவி பறப்பதை தடுக்கவும் முடியவில்லை.

ஏனென்றால் வருடாவருடம் பல் வைத்தியர் ரில்ஸ்குல் என்ற கொடுப்பனவு அரசால் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்படும்.

பல் வைத்தியர்கள் அந்தப்பணத்தை வாரியெடுக்கும் தருணம் இது என்பதை சொல்லவும் வேண்டுமோ..?

எப்போதும் பல் வைத்தியரிடம் போவோர் இரட்டிப்பு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சரியான காரணங்களை கேட்காமல் பற்களை இளித்தால் கட்டணமும் உயரும் என்றால் அது பிழையோ..?

அட எதுக்கு தடுக்கிறே..?

உள்ளதை சொல்ல விடமாட்டேங்கிறியே..?

போதையில் பல்லை உடைப்பேன் என்று வீர வசனம் பேசும் நம்மாள் பல் வைத்தியரிடம் மாட்டுப்பட்டு கிடக்கும் போது படும் அவஸ்த்தை கண்கொள்ளா காட்சியாகும்.

அதுதான் பல்லுடைப்பேன் என்று பேசுகிறோமோ..?

தண்ணியடித்து, பற்களை ஒழுங்காமல் தீட்டாமல் இருந்து பழுதடைந்த பின் மற்றவன் பற்களை உடைக்கப் புறப்படுகிறோமா..நாம் என்பது ஓர் உப ஆய்வு.

ஏனென்றால் சரியான பல் வைத்தியர் இருக்கும் இனங்களில் பல்லை உடைப்பேன் என்ற பேச்சு வழக்கை காண முடியவில்லை.

இப்படி பல சிந்தனையள் கண்டியளோ..?

அலைகள் 20.01.2019 ஞாயிறு

Related posts