உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 03

இயற்கையின் ஆசீர்வாதமும், தேவனுக்கு நன்றியும். (பொங்கல் வாழ்த்து) சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகோபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். வாசக நேயர்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். ( பொங்கல் என்பது, கடவுளுக்கு அவர் ஈர்ந்த நன்மைகளுக்குகாக நன்றி கூறுவதாகும் அல்லது நன்றிப்பலி செலுத்துவதாகும் ). அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதி உள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். மத்தேயு 5:45 நாம் வாழும் இந்த உலகத்தில் சகலஉயிரினங்களும் தேவன் படைத்த படைப்பால் கிடைக்கும் சகல நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றன. குறிப்பாக சகல மனிதர்களும் அவர்கள் நல்லவர்களோ, கெட்டவர்களோ எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், தேவன் படைத்த இயற்கையின் ஆசீர்வாதங்களை எவ்வித வேறுபாடுமின்றி அனுபவித்து வருகின்றனர். தேவன் தமது படைப்பாகிய சூரியன், சந்திரன், காற்று, மழை, பனி,…

மன்னாரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்

இலங்கையின் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர். போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ஏராளமான பேரை ராணுவம் கொன்று குவித்ததாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. மன்னார் நகரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். இங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இருந்தனர். இந்த நகரம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரின்போது இங்கு இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வடக்கு மாகாணத்திலுள்ள மன்னார் நகரில் கடந்த ஆண்டு கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்கு பள்ளம் வெட்டியபோது அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய்…

தமிழகத்தை 5 கி.மீ சுற்றளவுள்ள ‘விண் கல்’ தாக்கியதா?

தமிழகத்தில் 8 கோடி முதல் 55 கோடி ஆண்டுகளுக்கு முன் 5 கி.மீ சுற்றளவுள்ள விண்கல் தாக்கியதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் தற்போதுள்ள நீலகிரிக்கும், கொடைக்கானலுக்கும் இடையிலான பகுதியில் தாக்கி இருக்கலாம், அதன் மூலம் மிகப்பெரிய உயிரினமான டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மைசூர் பல்கலைக்கழகத்தில் உள்ள பூமியின் ஆதி வரலாற்றுத்துறையை ஆய்வு செய்யும் நில அறிவியல் துறையின் பேராசிரியர் கே.என்.பிரகாஷ் நரசிம்மா, மங்களூரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல் நிலவியல் துறையின் முன்னாள் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமண்யா ஆகியோர் நுண்ணோக்கி கொண்டும், வெறும் கண்களாலும் பாறைகள் குறித்தும், விண்கற்கள் குறித்தும் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் தாங்கள் கண்டுபிடித்த விஷயங்களை, தகவல்களை ‘ காவேரி பள்ளம்’ என்ற தலைப்பில் “ ஜர்னல் ஆப்தி ஜியோலஜிகல் சொசைட்டி ஆப் இந்தியா”…

ரணில் – சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இணைந்து இரகசியமாக மேற்கொள்ளும் தீர்மானங்களை செயற்படுத்த இடமளிக்கமாட்டோம் என எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபகஷ் தெரிவித்தார். பெலியத்த பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையின் புதிய கட்டட திறப்பு விழா இன்று இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் கல்விக்கு பாரியளவில் நிதி ஒதுக்குவதாக பிரசாரம் செய்துவருகின்றது. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இது எதிர்காலத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதன் மூலம் கல்விக்கான ஒதுக்கீடுகளை குறைப்பதே இவர்களின் திட்டமாகும் அத்துடன் விவசாய பயிர்களை அழித்துவரும் சேனா கம்பளி புழு தொடர்பில் அரசாங்கம் மெளனம் காத்து வருகின்றது. இது அரசாங்கத்தின் திட்டமா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது. வெளிநாடுகளில் இருந்து…

சிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது!

சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது தற்போது, தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து இந்திய தகவல் அறியும் சட்ட மூல ஆர்வலர் குறிப்பிட்டுள்ளதாவது, சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.…

தேர்தல்களை நடத்திய பின் அரசியலமைப்பு பற்றி சிந்திப்பது தவறல்ல

புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வந்து நாட்டை பிளவுபடுத்தும் தேவை எவருக்கும் இருக்காது என தான் நம்புவதாக கண்டி மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியலமைப்பு யோசனைகளடங்கிய நிபுணர் குழு அறிக்கையில் நல்லவற்றைப் போன்றே சில குறைபாடுகளும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான அரசியலமைப்புச்சபை நியமித்திருக்கும் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களுக்கு கையளித்து தெளிவுபடுத்தும் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்குழு நேற்று மஹா சங்கத்தினரைச் சந்தித்தது. சபை முதல்வரும் மலைநாட்டு உரிமைகள் அரச தொழில்முயற்சி அபிவிருத்தியமைச்சரும் கண்டி மாவட்ட அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான இக் குழுவில் அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார தயா கமகே இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்கே பண்டார, மயந்த திசாநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த…

இருபத்தியாறு வயது இளைஞர் பரிதாப மரணம் ஏன் தெரியுமா..?

டென்மார்க்கின் இன்றைய காலைச் செய்தியில் அதிக முக்கியம் பிடித்தது பராபின் ஓயில் என்ற திராவகத்தை உடலில் ஏற்றி மரணித்த 26 வயது பாடிபில்டர் ஒருவரிக் பரிதாப கதையாகும். பராபின் ஓயிலை ஏற்றுவதா.. ? ஆம் அது ஒருவகை போதை வஸ்த்து போன்ற திராவகம். அதை உடலில் தொடர்ந்து ஏற்றி வந்தால் கைகளின் மசில்ஸ்கள் இயல்புக்கு மாறாக யானைக் கால்கள் போல பெருக்கும். இப்படி அழகு காட்டுவது இளைஞர்களுக்கு இன்றய தமிழில் சொல்வதானால் கெத்து..! இறந்துவிட்ட இளைஞர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதை ஏற்றத் தொடங்கி விரைவான ஆணழகன் போல கட்டுடலை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் தவிடு நிறத்தில் அவர் உடலில் புதிய அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்தன. வைத்தியரிடம் சென்றால் அவர் ஏற்றிய பராபின் ஓயில் செய்த வேலை இப்போது வினையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இளைஞர் பரிதாப மரணத்தை தழுவினார்.…

இன்று முதல் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்கின்றன

தை பிறந்துவிட்டதா வழி பிறக்கிறதா என்று யோசித்தால் வழியில் போகும் பொதுத்துறை வாகனங்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளன என்பதுதான் இன்றைய செய்தி. தை 20 ம் திகதி பேருந்து, ரயில், மெற்றோ என்பவற்றின் கட்டணங்கள் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப 2.1 வீதம் உயர்வடைகின்றன. இந்த விலை உயர்வானது இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த முடிவை யார் எடுத்தது என்று கேட்காதீர்கள்..? இது பழைய முடிவு.. அரசாங்கம் ஐம்பது கோடி அறுபது கோடி ஒதுக்குவதாக தலைப்பு செய்திகள் வெளியிடும் பின்னர் நான்கு வருடங்களுக்கு என்று மெல்லிய குரலில் இன்னொரு உப செய்தி வரும். ஆனால் தொலைக்காட்சிகள் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 15 கோடி என்று தலைப்பு செய்தி போடாது.. அறுபது கோடி என்று அடித்து முழக்கும். அது போலத்தான் அடுத்து வரும் ஆண்டுகளில்…

பன்கோவாவின் டாக்டர் பட்டம் பறிமுதல் நீதிமன்று உறுதி செய்தது

பன்கோவாவை வாசகர்கள் மறந்திருப்பார்கள்.. போலந்தை பின்னணியாகக் கொண்ட இந்தப் பெண்மணி டென்மார்க் பல்கலைக்கழக வீரர்களுக்கு காதில் இரண்டு பக்கங்களிலும் கொத்தாக பூவை சுற்றிய பல்கலைக்கழக விரிவுரையாளர். கேர்னிங் நகரில் முன்னர் மேயராக இருந்த கெல்கியா சனா பின்னர் அறிவியல் ஆய்வுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இவர் புகழ் பெற்றிருந்தார். அத்தருணம் பல குற்றச் செயல்களை இழைத்ததாக செய்திகள் வந்தன. இவை பழைய கதைகள்.. மூலிகைப் பெற்றோல் ராமருக்கு மு.கருணாநிதியும், சந்திரபாபு நாயுடுவுமாகிய இரண்டு உலக அறிவு மிக்க முதல்வர்கள் பெற்றோலை கண்டு பிடித்தார் என்று பரிசு வழங்கியது போல இந்த பெண்மணியும் பெற்றோல் ராமர் பாணியில் பல விருதுகள் வென்று சாதித்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. அதிலொன்றாக இவருடைய மூளை தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் வெளி வந்தபோது அடடா பெரிய கெட்டிக்காரி என்று புகழாத வாய்கள் இருக்கவில்லை. பின்னர்தான் தெரியவந்தது,…

சர்க்கரை வியாதி இரண்டா கவனம் உங்கள் பற்கள் புதிய ஆய்வு

ஒருவருக்கு சர்க்கரை வியாதி 2 இருந்தால் அந்த வியாதி இல்லாத ஒருவருடைய பற்களுடன் ஒப்பிட்டால் சர்க்கரை வியாதி இரண்டு உள்ளவர்களின் பற்கள் பழுதடையும் வேகம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக இன்றைய காலைச் செய்தி கூறுகிறது. இது தொடர்பாக சர்க்கரைவியாதி கண்ட 250.000 பேர்களிடம் எடுத்த ஆய்வில் இந்த இந்த உண்மை கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே உங்களுக்கும் சர்க்கரை வியாதி இலக்கம் இரண்டா..? வரும் நாட்களில் பல் வைத்தியர் கட்டணம் உயர்ந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள் என்பது இந்த ஆய்வுதரும் முன்னெச்சரிக்கை அம்ம. அது சரி இந்த நேரம் பார்த்து இந்த ஆய்வு வெளிவர காரணமென்ன..? என்று நமது மண்டைக்குள் ஒரு குருவி பறப்பதை தடுக்கவும் முடியவில்லை. ஏனென்றால் வருடாவருடம் பல் வைத்தியர் ரில்ஸ்குல் என்ற கொடுப்பனவு அரசால் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்படும். பல் வைத்தியர்கள் அந்தப்பணத்தை வாரியெடுக்கும் தருணம் இது…