என் வழி இனிமேல் தனி வழி இல்லை!

இனிவரும் நாட்களில் ரஜினியின் வழி தனி வழி அல்ல. அவரது சொந்த வழியில்தான் அவர் செல்லப் போகிறார் என்று நெருக்கமானவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

“என் வழி தனி வழி என்று ரஜினிகாந்த் பேசிய வசனம் மிகவும் பிரபலம். சினிமாவில் மட்டும் அல்ல சொந்த வாழ்க்கையிலும் அவர் யாரையும் பிரதிபண்ணாமல் வாழ்பவர்.

அந்த காரணத்தால் தான் அவர் வழி தனி வழியாகவே இத்தனை நாட்களாக இருந்தது.அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். ஆனால் இன்னும் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் அவர் தனது தனிவழியில் நிதானமாக தாமதமாக வந்தாலும் புதிதாக வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சி தொடங்கும் முன்பே தன் பெயரில் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வருபவர்கள் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அதை ரஜினி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அரசியல் கட்சி தொடங்கியபோதிலும் கமல் தொலைக்காட்சி எதுவும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் யாரையும் பிரதிபண்ணாமல் இருக்கும் ரஜினி அரசியலில் தனது முன்னோடிகளின் வழியில் செல்லத் தயாராகி விட்டார். பிற அரசியல்வாதிகளைப் போன்றுதான் அவரும் இருப்பார் என்று தொலைக்காட்சி விஷயத்தில் நிரூபித்துள்ளார். தொலைக்காட்சி தொடங்குவது தவறு இல்லை. ஆனால் ரஜினி ஏதாவது வித்தியாசமான அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கும்போது இப்படி சாதாரணமான காரியம் செய்வது அதிருப்தி அளிக்கிறது.

Related posts