உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது பதிப்பு..

உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் இன்று யாழ்ப்பாணத்தில் மூன்றாவது பதிப்பு கண்டது. மூன்று மாத இடைவெளியில்.. இலங்கையின் ரியூப்தமிழ் புத்தக சந்தையின் பணியாளர்களின் சாதனை இதுவாகும். இதுவரை 5000 பிரதிகளை தொட்டுள்ளது. தொடர்கிறது.. இந்த நூல் மாதம் ஒரு பதிப்பு என்ற அடிப்படையில் தொடர்ந்து அச்சிடப்படும்.. ரியூப்தமிழ் புத்தக சந்தையின் அடுத்த புத்தகம் அச்சாகும்வரை ஒரே புத்தகமே தொடர்ந்து அச்சாகும். இது இலங்கையின் புத்தக சந்தையில் ஒரு புதிய வரலாறாகும். டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் இந்த பெருமைக்குரியவராகின்றனர். அலைகள் 31.12.2018

சுவிற்சலாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் நிர்வாகம் மக்கள் முரண்பாடுகள்..( காணொளி )

அந்த நாட்டில் வாழும் அதே ஆலயத்தின் அடியார்கள் கூறும் கருத்துக்களை கேட்டுப்பாருங்கள்.. உண்மை என்ன..? மக்கள் எப்படியுள்ளார்கள்..? உலகம் வளர்ந்த அளவுக்கு புலம் பெயர் தமிழர் சிந்தனை வளர்ந்துள்ளதா..? அடுத்த கட்டம் என்ன..? விரட்டப்பட்ட ஐயர் வருவதா தீர்வு..? இந்த நிர்வாகம் தவறென்றால் சரியான நிர்வாகம் என ஒரு நிர்வாகம் தமிழரிடையே எங்காவது இருக்கிறதா..? கணக்கு காட்டி என்ன பயன்..? கணக்கு காட்டியவர் தமிழ் சமுதாயத்தில் மதிக்கப்பட்டார்களா..? நேர்மையாளரை பாதுகாக்கும் கடமையை இதே மக்கள் முன்னைய கால சமுதாய பிரச்சனையில் காட்டினார்களா..? ஐயர் விரட்டப்பட்டபோது துள்ளி எழும் மக்கள் இந்த சமுதாயத்திற்காக உண்மையாக பாடுபட்டவர்கள் காயடிக்கப்பட்டபோது ஏன் இதுபோல போர்க்கோலம் பூணவில்லை..? இப்படி ஏராளம் கேள்விகளுக்கு இந்த காணொளி பதில் தரலாம். இதை ஓர் ஆய்வாக பார்க்கவும் காரணம் வரப்போகும் புதிய புலம் பெயர் சூறாவளியின் ஆரம்ப…

இந்திய தமிழ் சினிமா 2018 ம் ஆண்டு இழந்துபோன பணம் 325 கோடி ரூபாய்

இந்திய தமிழ் சினிமா இந்த ஆண்டு விட்ட முதலை உழைக்கவில்லை. மொத்தச் செலவு 1600 கோடி ரூபா வருமானமாகக் கிடைத்தது 1275 கோடி ரூபாய்கள். ஏற்பட்ட 325 கோடியில் 225 கோடி ரூபாவை இழந்துள்ளவை மூன்று கோடி ரூபாய்க்கு குறைவான பணத்தில் தயாரிக்கப்பட்ட படங்களே. இந்த ஆண்டு 181 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் 26 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மற்றைய படங்கள் விட்ட பணத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது. ஐம்பது கோடிகளுக்கு மேல் செலவிட்டு எடுக்கப்பட்ட படங்கள் ஏழு, ஐம்பது கோடிக்கு கீழ்; எடுக்கப்பட்ட படங்கள் ஒன்பது. 20 கோடிக்குள் நான்கு படங்கள். 15 கோடிக்குள் கீழ் 10 படங்கள். எட்டு கோடிக்குள் 23 படங்கள், 5 கோடிக்குள் 32 படங்கள், மூன்று கோடிக்கு கீழ் உருவான படங்கள் 91 ஆகும். பொதுவாக சிறிய பட்ஜட்…

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்

கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “ வேட்பு மனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி துவங்கும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 10 ஆம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14 ஆம் தேதி கடைசி நாளாகும். ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷாலுக்கு கல்யாணம் ஆந்திர அனிஷாவை மணக்கிறார்

விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. நடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் விஷால். 'செல்லமே' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி', 'தாமிரபரணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார். மேலும், தயாரிப்பாளராகவும் மாறி 'பாண்டியநாடு', 'ஆம்பள', 'துப்பறிவாளன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, "நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன். லட்சுமிகரமான பெண்ணைத் தான் திருமணம் செய்யவுள்ளேன்" என்று தெரிவித்து வந்தார் விஷால். நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச்…

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் சி.வி.சண்முகம் பேட்டி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர், முன்னாள் தலைமைச் செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக 75 நாட்கள் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அரசு ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்தது. இந்நிலையில் விசாரணை ஆணையம் முன் பலரும் ஆஜராகி தங்கள் தரப்பு சாட்சியங்களை அளித்து வருகின்றனர். விசாரணை ஆணையம் பிப்ரவரி 24-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இறுதிக்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகன் ராவ், அப்போலோ நிர்வாகத்தினரும் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் உணவுச் செலவாக ரூ. 1 கோடியே 17 லட்சம் செலவிட்டதாக கூறப்பட்டது குறித்தும், வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை…

லக்ஷ்மன் கிரியெல்ல பதவி விலக உத்தேசம்

அரசாங்க நிறுவனங்கள்,மலைநாட்டு பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லயின் பொறுப்பின் கீழ் எந்தவொரு முக்கியமான அரசாங்க நிறுவனமும் கொண்டுவரப்படவில்லை. அந்த அமைச்சுக்குரிய பொறுப்புகள் குறித்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தில் இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம், பி.சி.சி மற்றும் அரச வழங்கள் முகாமைத்துவ கூட்டுத்தாபனம் உட்பட தற்போது பெறுமளவுக்கு வங்குரோத்து நிலையிலிருக்கும் நான்கு நிறுவனங்களே அவரின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அண்மைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு ஜனாதிபதி சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புகளின் போது ஜனாதிபதிக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுத்த கிரியெல்ல மீதான நேரடித் தாக்குதலாக இது அரசியல் வட்டாரங்களில் நோக்கப்படுகின்றது. பிரதமர் விக்ரமசிங்கவின் உறுதியான ஆதரவாளரான கிரியெல்ல ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையினால் விசனம் அடைந்திருப்பதாகவும்.ஆதரவாளர்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் போகும் என்பதால் அமைச்சர் பதவியைத் துறக்கப்…

வங்காளமொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் காலமானார்

தாதா சாகேப் பால்கே உட்பட பல்வேறு சிறப்பு விருதுகளை பெற்ற பிரபல வங்காளம் மொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென்(95) கொல்கத்தாவில் நேற்று காலமானார். இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் மிருணாள் சென். வங்காளம் மொழி திரைப்பட இயக்குநரான இவர் இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர். இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்காளம் ஆகிய 4 மொழிகளில் சுமார் 30 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் மற்றும் 4 ஆவணப்படங்களை மிருணாள் சென் இயக்கியுள்ளார். இவரைப் பற்றியும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இவரது படைப்புகள் பிற மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டும் வெளியாகின. இளம்வயதில் திரைப்படங்கள் குறித்து பல புத்தகங்களைப் படித்ததால் மிருணாள் சென்னுக்கு திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தால் திரைப்பட விமர்சனங்கள் எழுதிவந்தார். கொல்கத்தா ஸ்டுடியோவில் ஓடியோ தொழில்நுட்ப…

ஷேக் ஹசீனா தொடர்ந்து 3 வது முறையாகவும் வெற்றி!

பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மிகப் பெரும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்தலில் வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 350 பாராளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி, இதுவரை 281 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது அக்கட்சி முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட கூடுதலான இடங்கள் ஆகும். தேர்தல் முறைகேடு புகார்கள், வாக்குசாவடிகளை கைப்பற்றுதல் மற்றும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட இத்தேர்தலை ´´ஒரு கேலிக்கூத்தான தேர்தல்´´ என்று பங்களாதேஷ் எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன. எதிர்க்கட்சிகள் இதுவரை 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளை ஏற்காத எதிர்கட்சிகள் மறுதேர்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன. ´´இதுபோன்ற கேலிக்கூத்தான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் தவிர்த்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்´´…

ஆளுனர்களுக்கு பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுரை

சில ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார். இன்றைய தினத்திற்கு முன்னர் அவர்கள் குறித்த பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு ஆளுனர்களிடம் விசாரித்த போது அவர்கள், ஆளுனர்களில் திருத்தம் காரணமாக ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களுக்கு மீண்டும் ஆளுனர் பதவி கிடைக்கப் பெறும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த அறிவித்தலின் பின்னர் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லகாமவிற்கு அவ்வாஙறான அறிவித்தல்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சுற்றுலா ஒன்றிற்காக வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (30) இரவு மீண்டும்…