நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக கிறிஸ்துமஸ்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படம், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கிறது. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் Azerbaijan நாட்டில் இந்தப் படத்தின் பாடல்கள் படமாக்கப்பட்டன. அப்போது அந்த நாட்டுக் குழந்தை ஒன்று நயன்தாராவுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம்…