டென்மார்க்கில் தமிழீழ தேசிய மாவீரர் நாள்2018

நவம்பர் 27 தமிழீழத்தின் தேசிய நினைவு நாள், தமிழீழ மண்ணிற்காய் வீரச்சாவடைந்த வீரர்களின் நாளான இன்று டென்மார்க்கில் Herning மற்றும் Holbæk நகரங்களில் பெருந்திரளான தமிழீழ மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.

மண்டபம் நிறைந்த மக்களின் நடுவே பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து “ஏறுது பார் கொடி ஏறுது பார் “ என்ற தமிழீழத்தின் தேசிய பாடலுடன் தேசிய கொடி ஏற்றப்பட அதற்கு பின் முதல் மாவீரன் சங்கர் வீரச்சாவடைந்த் நேரமான 13.35 ( தாயக நேரம் 6,05) இற்கு மாவீரர் பொது ஈகைச்சுடர் “ ஏற்றப்பட துயிலும் இல்ல பாடல் ஒலிக்க மாவீரர்களின் உறவினர்களால் சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டது.

அதன் பின் மாணவர்கள், மக்களால் சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செலுத்த்ப்பட்டது. அதே நேரம் தேசநிலா இசைக்குழுவினரால் மாவீரர் பாடல்கள் இசைக்கப்பட்ட. அந்த நிகழ்வு நிறைவடைந்ததும் டென்மார்க் நாட்டின் பல நகரங்களில் இருந்து வருகை தந்த மாணவர்களின் எழுச்சி நடனங்கள்,கவிதை, டெனிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் Jakob Sølvhøj மற்றும் Trols Ravn சிறப்பு உரைகளும் இடம் பெற்றன.

இறுதி நிகழ்வாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடன் தேசிய கொடி இறக்கலுடன் நிகழ்வுகள் யாவும் உணர்வு பூர்வமாகவும் நேர்த்தியாகவும் நடந்தேற தமிழீழத் தேசியத் தலைவரின் துரநோக்கின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்துள்ள இளம் தலைமுறையினரை பாராட்டியே ஆகவேண்டும்.

ஏனெனில் மண்டபத்தில் கரை புரண்டு ஓடிய மக்கள் வெள்ளத்தினை நேர்த்தியாக ஒழுங்கமைத்து அனைத்து வேளைத்திட்டங்களையும் சிறப்பாக நடாத்தி இறுதி வரை அழகாக கொண்டு சென்றனர்.

Related posts