ஆர்ஜண்டீனாவில் ஜி 20 நாடுகளின் இரண்டு நாள் மாநாடு ஆரம்பம்

தென்னமெரிக்காவில் உள்ள ஆர்ஜண்டீனா நாட்டில் உலகின் பணக்கார பலமிக்க 20 நாடுகளின் மாநாடு இன்று வெள்ளி ஆரம்பித்தது. சென்ற ஆண்டு ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நடந்தபோது பலத்த ஆர்பாட்டங்கள் தீ வைப்புக்கள் எல்லாம் நடைபெற்ற நினைவுகள் மறக்க முன்னர் ஆர்ஜண்டீனாவில் கூடியுள்ளனர். உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் தலைவர்கள் செயலில் மாற்றம் வேண்டும். உலக மக்களை ஏழ்மைக்குழிக்குள் தள்ளி வைத்திருக்கும் உங்கள் சுயநல பொருளாதார ஒழுங்கு மாறவேண்டுமென்ற போராட்டங்கள் தலைநகர் புவனஸ் அயரஸ்சில் வெடித்துள்ளன. ஆர்ஜண்டீனா நாடு கடந்த பத்தாண்டு காலத்திற்கு முன்னரே பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுவிட்டது. ஆகவே மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். தமது அதிருப்திகளை காட்ட வீதிக்கு வந்துள்ளனர். இவர்களை அடக்க போலீசார் பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் வந்துள்ள தலைவர்களோ மக்களோ ஆர்பாட்டங்களோ நமக்கு பெரிதல்ல என்று கூறாத குறையாக வந்துள்ளனர்.…

ஓய்வூதியம் பெறுவோருக்கு நல்ல காலம் பிறக்கிறது

டென்மார்க்கின் புதிய வரவு செலவுத்திட்டமானது ஓய்வூதியம் எடுப்போருக்கு ஒரு புதிய கதவை திறக்கவுள்ளது. பென்சன் எடுப்போருக்கு சம்பளம் கூடுகிறது.. அதேபோல வரி கட்டாமல் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட மணித்தியாலங்களின் எண்ணிக்கையும் உயர்கிறது. சம்பளம் எதிர்வரும் 2020 ல் 0.3 வீதம் கூடுகிறது. அதுபோல எல்ரா செக் எனப்படும் முதியோர் காசோலை சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் அடுத்த ஆண்டு 0.2 வீதம் உயர்கிறது. போல்க பென்சன் எடுப்போருக்குரிய அடி நிலை பாட்றா என்னும் வரிச்சலுகை வருடாந்தம் 60.000 குறோணர்களில் இருந்து 1.00.000 குறோணர்களாக உயர்கிறது. இதனால் ஓய்வூதியம் பெற்றோர் கரங்களில் காசு விளையாடப்போகிறது என்கிறது ஆளும் வென்ஸ்ர கட்சியும் டேனிஸ் போல்க்க பார்டியும். சீனியர் பிறிமியர் எனப்படும் வரிவிலக்கு பெற்று உழைக்கக் கூடிய தொகை 30.000 ஆகிறது. இதற்காக 30 மணி நேரம் வேலை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.…

நாடு கடத்தப்படுவோரை தங்க வைக்க தீவு தயாராகிறது.

டென்மார்க்கில் அரசியல் தஞ்சம் கோரியவர்களில்.. 01. தஞ்சம் நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட வேண்டியோர்... 02. துப்பாக்கி, கத்தி போன்றன தூக்கி சண்டைகளில் குதித்து சட்டத்தை மதியாது நடப்போர்... 03. ஆயுதப்போர்களில் குதித்தோர்.. 04. போதை வஸ்த்து கடத்தல் போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டடோர்.. என்னும் தரங்களை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டால் இனி தலைநகர் பகுதியை அண்டியுள்ள லிண்ட்கொல்ம் என்ற தீவுக்கு இட்டுச் செல்லப்படுவர். இது சிறைச்சாலை படத்தில் வந்தது போல தப்பி ஓட வழியில்லாத ஒரு தீவு. இப்போது இங்கு வெறும் மூன்றே மூன்றுபேர் மட்டுமே வசிக்கிறார்கள். இந்தத் தீவு 12.000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. 7.000 ச.மீ பரப்பளவில் ஆய்வு கூடம் ஒன்று உண்டு. 1966ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆய்வு கூடத்திற்கு நோயினால் பாதிக்கப்பட்ட மிருகங்கள் கொண்டு செல்லப்பட்டன.…

கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய பரிசளிப்பு இன்று

கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள இந்தப் பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல யாழ் மாவட்டம் வரை பரந்துபட்ட அடிப்படையில் இந்த பரிசளிப்பு நடைபெறுகிறது. சுமார் 400 வரையான மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமான சான்றிதழ்களை ரியூப் தமிழ் சின்னம் பொறித்து வழங்குகிறது பாடசாலை சமூகம். இந்த நிகழ்ச்சியில் இன்னொரு சிறப்பம்சம், சிறப்பு சித்தியடைந்த 150 மாணவர்களுக்கு டென்மார்க் கி.செ.துரை எழுதிய உலக புகழ்பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகமும் வழங்கப்படுகிறது. இவற்றுடன் ரியூப் தமிழ் குழுவினர் யாழ்ப்பாணம் நாவலர் வீதி ரியூப் தமிழ் காரியாலயத்தில் இருந்து புறப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் மேலதிக விபரங்கள் வரும். அலைகள் 30.11.2018

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 48

தேவநீதியும் மனித வாழ்வும். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். கர்த்தாவே யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? உத்தமமாக நடந்து நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தை பேசுகிறவன்தானே. சங்கீதம் 15:1-2. இலங்கையில் நடைபெறும் அரசியல் குழப்பங்கள், சுயநலத்திற்காக எதனையும் செய்யத்தயாராக இருக்கும் அரசியல் தலைவாகள், மாவீரர்தின நினைவுநிகழ்வுகள், அதனால் ஏதும் கலவரங்கள் நடைபெறுமா என்ற பயங்கள் இப்படியாக பல செய்திகளை தினமும் வாசிக்கிறோம். இதனை சிந்திக்கும்போது இந்த நற்சிந்தனையை விரிவாக விளங்கமுடியும். இன்றைய நற்சிந்தனையை நன்றாக விளங்கிக்கொள்ள சங்கீதம் 15ஐ வாசிப்போம். அப்போது தேவனுடைய நீதியினால்வரும் மனித வாழ்வின் முழுமையை நம் அன்றாட வாழ்வில் உணர முடியும். கர்த்தாவே யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தை பேசுகிறவன்தானே.…

இன்றைய இலங்கை அரசியலில் என்ன நடந்துள்ளது எழுதுகிறது கூகுள் ரைட்டர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் ஒருவர் இன்று நியமிக்க படுவதற்கான சூழ்நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது ! இதற்காக ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த மூவர் பெயர்கள் கூறப்படுகின்றன ! ஒன்று திலக் மாரப்பன இரண்டு ரஞ்சித் மத்துமபண்டார மூன்று ராஜித்த சேனாரத்ன ஆகிய மூவரின் பெயர்களே உலா போகின்றன. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க தவறிவிட்டார் என்று தமிழர் கூட்டமைப்பு கூறியிருக்கிறது ! இதனால் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர் அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த அக்டோபர் 26ம் திகதி பிரதமர் ஆக்கப்பட்ட மகிந்த பெரும்பான்மையை நிரூபிக்க வில்லை, ஆகவே பெரும்பான்மை உள்ள ஒருவரை பிரதமராக நியமிக்க தமிழர் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். இதேவேளை ரணில் விக்கிரமசிங்கா தமிழர் கூட்டமைப்பிற்கு ஒரு கடிதம் வழங்கி இருக்கிறார். அக்கடிதத்தில்…

வடக்கு மகாகாண மகளிர் அமைச்சு 320 மில்லியன் ரூபா ஊழல் விசாரணை

வடமாகாண மகளீர் விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட 320 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக் குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளார். வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்து மூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள் பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையினை சமர்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே விசாரணை அதிகாரிகளை பணித்துள்ளார். முன்னாள் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்களினால் பல்வேறு அமைச்சின் திணைக்களங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி நிதி வடமாகாண ஆளுநர் சுயேட்சை நிதியத்தின் வங்கி கணக்கில் நிலையான வைப்பில் இடப்பட்டு அதன் வட்டிப் பணத்திலிருந்து…