செக்கச் சிவந்த வானம் பணம் உழைக்க போட்ட லைக்கா திட்டம் வெற்றி

செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. முக்கிய நடிகர்கள் பலரை இணைத்த காரணத்தால் அப்படம் முதல் நாள் விஜய் படம் போல அரங்கு நிறைந்து கிடந்தது. இன்று ஒவ்வொரு நடிகருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள், நடிகைகளுக்கும் இருக்கிறார்கள். இவர்களுடைய படங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை குறிவைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அரங்கு நிறையும் என்று மணிரத்தினம் போட்ட கணக்கும், லைக்கா போட்ட கணக்கும் சரி. அனுபவ ரீதியான வர்த்தக தந்திரத்தில் விட்ட முதலை இக்கூட்டணி ஏதோ ஒரு வகையில் உழைக்க வழியிருக்கிறது. இன்றுள்ள நிலையில் ஒரு படம் விட்ட பணத்தை உழைத்தால் அதுவே போதுமானது. மற்றப்படி தர்ம நியாயம் எதுவுமே கிடையாது என்ற கோணத்தில் பார்த்தால் இந்த முயற்சி சரியானதே. உதாரணமாக.. ஜோதிகாவுக்கு பெண்கள் கூட்டம் ஒன்று இருக்கிறது அவர்களை குறிவைத்து ஜோதிகா இறக்கப்பட்டுள்ளார். விஜய் சேதுபதியும்…

இரண்டாவது இடம் பிடித்த நடிகர் அஜித்குமாரின் தக்‌ஷா குழு

நடிகர் அஜித்குமார் ஆலோசகராக இருந்து மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், சமையல், புகைப்பட கலைஞர், ஹெலி டிசைனர்,மெக்கானிக் என பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மோட்டார் பைக் பந்தயங்களில் ஆர்வமுள்ள அஜித் இதற்காக நடிப்பதை ஒத்திவைத்து விட்டு வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று போட்டிகளில் பங்கேற்று வந்தார். விமானம் ஓட்டுவதிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. விமானம் ஓட்டும் லைசென்சும் வாங்கி வைத்துள்ளார். சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்துள்ளார். ருசியாக பிரியாணி சமைப்பார். படப்பிடிப்பின் கடைசி நாளில் தனது கையால் பிரியாணி சமைத்து படக்குழுவினருக்கு பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் அஜித்குமாருக்கு புதிய பதவி வழங்கப்பட்டது. அந்த கல்லூரியின்…

சென்னையில் நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா

சென்னையில் நாளை நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன் பொன்விழாவில் திரைத்துறையினரை முதல்வர் கே.பழனிசாமி கவுரவிக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, தமிழக அரசின் சார்பில் மாவட்ட வாரியாக கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்புரையாற்றினார். 31 மாவட்டங்களில் நடந்த விழாக்களில் ரூ.5,140 கோடியே 18 லட்சம் மதிப்பில் 2,357 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. ரூ.5,747 கோடியே 24 லட்சத்தில் 3,214 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், ரூ.5,464 கோடியே 79 லட்சம் மதிப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 392 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை பிற்பகல்…

யாழ். மாந­கர சபையில் மோச­டி­

சபை பொறுப்­பேற்­கப்­பட்ட பின்­னர் நடை­பெற்ற ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பான பட்­டி­யல் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை இலஞ்ச ஊழல் விசா­ர­ணைக் குழு­வால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அதை ஆராய்ந்த மேயர் அனைத்­துக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பி­லும் முழு­மை­யான விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் 6 ஆவது அமர்வு மேயர் இ.ஆர்னோல்ட் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. அதி­லேயே இந்­தப் பட்­டி­யலை இலஞ்ச ஊழல் விசா­ர­ணைக் குழு­வின் தலை­வர் ராஜீவ்­காந்­தால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. பட்­டி­ய­லைச் சமர்ப்­பித்த அவர் தொடர் நட­வ­டிக்­கைக்­குப் பரிந்­து­ரைக்­கு­மா­றும் வலி­யு­றுத்­தி­னார். முறை­யற்ற ஆளணி நிய­ம­னம், இலஞ்­சம் பெற்­றமை, சட்­ட­வி­ரோத இறைச்சி விற்­பனை, முறை­யற்ற களஞ்­சி­யப் பதி­வு­கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டன. நல்­லூர் ஆலய திரு­வி­ழாக் காலங்­க­ளுக்­காக சபை அனு­ம­தி­யு­டன் தற்­கா­லிக தொழி­லா­ளர்­கள் 40 பேர் மாந­கர சபை­யில் உள்ள தொழி­லா­ளர் சங்­கத்­தால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். இவர்­க­ளின்…

சாமி படம் பார்க்கப் போய் சாவை தேடிக் கொண்ட பெண்

திரையரங்கில் இருந்த இளைஞரை கவர்ச்சியாக பார்த்தார் என்று மனைவியின் தலையை சுத்தியலால் தாக்கியும் அரிவாளால் துண்டாக்கிய கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா – தூத்துக்குடியைச் சேர்ந்தவர் 50 வயதான மாரியப்பன். அவரது மனைவி 45 வயதான காளியம்மாள் ஆவார். தம்பதிகள் இருவரும் கேரளா – திருவானந்தபுரம் முக்கோலைகால் என்ற இடத்தில் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந் நிலையில் இருவரும் அண்மையில் வெளிவந்த சாமி-2 திரைப்படத்தை பார்க்கச் சென்றுள்ளனர். படம் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் காளியம்மாள் அங்கிருந்த இளைஞர் ஒருவரை கவர்ச்சியாக பார்த்து சிரித்ததாக நினைத்துள்ளார். ஆனால் அதனை மாரியப்பன் படம் முடிந்து வீடு செல்லும் வரை காட்டிக்கொள்ளவில்லை. படம் முடிந்து வீடு திரும்பிய பின்னர் மாரியப்பன் காளியம்மாளிடம் இவ் விடயம் தொடர்பாக விசாரித்துள்ளார். காளியம்மாள் மாரியப்பனின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில்…

யாழில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரித்து வருகிறது..

யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது. “யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ்கின்ற…

அடுத்த மாகாண சபையாவது மக்களது எதிர்பார்ப்பை..?

அடுத்து வரும் மாகாணசபை சிறுபான்மையினர் தமது உரிமைகளை பெற்று ஏனைய சமூகத்தவர்களை போல சம அந்தஸ்துடன் வாழக் கூடியவகையில் அமைய வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார் அடுத்த மாகாண சபை மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அமைவதற்கான ஏற்பாட்டை எமது வாக்காளர்களே செய்ய வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய மாகாண சபையின் காலம் முடிவடைகிறது. அடுத்த மாகாண சபையாவது மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அமைய வேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் ஏனைய சமூகத்தைப் போன்று வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே என்றும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் ‘அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும்…

விக்னேஸ்வரனின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள விஷேட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மாதம் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார். அதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை கூறத்தக்கது. நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​ டெனிஸ்வரன்…

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டென்மார்க் வந்தார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் முதலாவது கறுப்பின அமெரிக்க அதிபருமான பராக் ஒபாமா நேற்றிரவு தனது தனி விமானத்தில் டென்மார்க் வந்தடைந்தார். இன்று அவர் டென்மார்க் சுல்டென்ஸ்க் பல்கலைக்கழகம் மற்றும் பிஸினெஸ் கோல்டிங் ஆகிய இரு கருத்தரங்கங்களில் உரையாற்ற இருக்கிறார். இவர் வருகையை டென்மார்க்கின் கோல்டிங் நகரசபை வரலாற்று புகழ் மிக்க நிகழ்வாக பதிவு செய்யக் காத்திருக்கிறது. இன்று மாலை கோல்டிங் வர்த்தகம் என்ற நிகழ்வில் ஒபாமா பேசுகிறார். இவர் தனி விமானத்தில் வந்துள்ளார், சீரான பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் பதவியில் இருக்கும் ஓர் அதிபர் வரும் போது கொடுக்கப்படும் பலத்த பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை. வீதிப் போக்குவரத்துக்கள் தடை செய்யப்படவில்லை. ஆனால் மண்டபத்தில் கைத்தொலைபேசி அனுமதிக்கப்பட மாட்டாது, விமான நிலையத்தின் பரிசோதனைகள் இடம் பெறும். போலீசார் சிவில் உடையில் மக்களோடு மக்களாக கலந்திருப்பார்கள். எதிர்கால தலைமைத்துவமும் தனித்துவமும்…